Latest Updates
-
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 16 முதல் இந்த 3 ராசிக்கு நல்ல யோகமான காலமா இருக்கப் போகுது...
Sun Transit In Magha Nakshatra 2024: மனித வாழ்க்கையில் கிரகங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அப்படி மாற்றுவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். சூரியன் தற்போது பூச நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைவதோடு, மக நட்சத்திரத்திற்குள்ளும் நுழையவுள்ளார். மக நட்சத்திரத்தின் அதிபதி கேது.

கேதுவின் நட்சத்திரத்திற்குள் சூரியன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது மகம் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த பெயர்ச்சியால் சமூகத்தில் நீங்கள் பிரபலமாகலாம். உங்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கலாம். மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், உங்களுக்கு இக்காலத்தில் வேலை கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் நீண்ட நாள் ஆசைகள் வரிசையாக நிறைவேறும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்க சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். வருமானமும் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் தொழிலில் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பான லாபத்தைத் தரும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது வருமானத்தில் நல்ல உயர்வை ஏற்படுத்தும். மேலும் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications