Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்கள் கொடிகட்டி பறக்க போகிறார்களாம்...உங்க ராசி இதுல இருக்கா?
பூமி உயிர்ப்புடன் இருக்க சூரியன்தான் ஆதாரமாக இருக்கிறது. சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ள நட்சத்திரம், பூமியின் ஆற்றல் ஆதாரம், வாழ்க்கையின் அடிப்படையாக உள்ளது. மனித வாழ்வில் மட்டுமின்றி ஜோதிட சாஸ்திரத்திலும் சூரியன் முக்கியப்பங்கு வகிக்கிறது.
ஜோதிடத்தில் சூரியன் நவகிரகங்களில் முக்கியமான ஒன்றாகும், சொல்லப்போனால் கிரகங்களின் ராஜாவே சூரிய பகவான்தான். மற்ற நவகிரகங்களைப் போலவே, சூரியனும் அவ்வப்போது ராசியை மாற்றுகிறார். அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் அதன் சொந்த ராசியான சிங்கத்திற்கு வருகிறது . அனைத்து ராசிகளின் வாழ்விலும் இந்த கிரக மாற்றம் சில தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் மிகவும் சிறப்பான பலன்களை தரப்போகிறது. இந்த பதிவில் சூரிய பெயர்ச்சியால் பலனடையப் போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியனின் ஸ்வராசிப் பிரவேசம் பல நன்மைகளைத் தரும். சூரியன் சிம்ம லக்னத்தில் அமரப் போகிறார். எனவே இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் இவர்களை அனைவரும் விரும்புவார்கள் மற்றும் மதிப்பார்கள்.
இவர்களுக்கு அங்கீகாரமும், புகழும் வந்து சேரும். பிரபலங்களுடன் பழகும் வாய்ப்புகள் தேடிவரும், இது தவிர தொழிலில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரம். பார்ட்னர்ஷிப்பில் தொழில் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.
தனுசு
சூரியன் ஸ்வராசிக்கு சஞ்சரிப்பதால் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். தனுசு ராசியின் ஒன்பதாம் வீட்டில் சூரியன் சிம்ம ராசியில் நுழைகிறார். இந்த காலகட்டத்தில் அனைத்து விஷயங்களிலும் நல்ல அதிர்ஷ்டம் இருக்கும். உங்களின் நீண்டகால முடிக்கப்படாத பணிகள் வெற்றிகரமாக முடிவடையும்.
புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுக்கான அனைத்து வாய்ப்புகளும் உங்களைத் தேடிவரும். தனுசு ராசிக்காரர்களுக்கு உள்நாடு அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வீட்டில் திடீர் சுபகாரியங்கள் நடைபெறுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
சூரியன் தனது சொந்த ராசியில் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறது. இந்த மாற்றம் கடக ராசியின் விளக்கம் தொடர்பான அம்சத்தில் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் தற்செயலான நிதி ஆதாயத்திற்கான அதிர்ஷ்டம் உருவாகிறது. வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு லாபம் கிடைக்க மிகவும் சாதகமான காலமாகும்.
மற்ற தொழில்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு வரும். பொதுவாக பணியில் இருப்பவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பொருளாதாரரீதியாக சிறந்த நேரத்தைக் கொண்டிருப்பார்கள். புதிய நிதி ஆதாரங்கள் திறக்கப்படும். கடக ராசிக்காரர்களுக்கு இது ஒருசாதகமான காலகட்டம் ஆகும். இந்த காலகட்டத்தில், கடக ராசிக்காரர்கள் இனிமையான பேச்சால் மற்றவர்களை கவருவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
