Latest Updates
-
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும்
சூரிய பெயர்ச்சியால் ஜூலை 16 முதல் இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Sun Transit In Cancer On 16 July 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார்.
தற்போது சூரியன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஜூலை 16 ஆம் தேதி சூரியன் சந்திரனின் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். சூரியனும், சந்திரனும் நட்புறவு கொண்ட கிரகங்களாகும். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியானது சற்று சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது கடகம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. அதாவது பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளிலும் அதிகம் பங்கேற்கக்கூடும். கடின உழைப்புக்கான முழு பலனையும் இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் புகழும், மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். திருமணமானவர்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். உங்களின் திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்ட படி நடக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். காதலித்து வந்தால், இக்காலத்தில் அந்த காதல் வெற்றி அடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications