Latest Updates
-
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த ஒரு மாதம் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா
Sun Transit In Cancer On 16 July 2024: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இதுவரை மிதுன ராசியில் பயணித்து வந்த சூரியன், 2024 ஜூலை 16 ஆம் தேதி, அதாவது இன்று கடக ராசிக்குள் நுழைந்தார். கடக ராசியானது சந்திரனின் ராசியாகும்.
இந்த கடக ராசியில் சூரியன் நுழைந்திருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது கடக ராசிக்கு சென்றுள்ள சூரியனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் பேசும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். இருப்பினும் தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது. செலவுகளும் அதிகரிக்கலாம். வெளியே ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இக்காலத்தில் ஆரோக்கியம் மோசமடையும். வணிகர்கள் முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இழப்புக்களை சந்திக்க நேரிடும். ஆனால் வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் எதிரிகள் அதிகம் தொந்தரவு செய்வார்கள். ஆரோக்கியத்தில் பெரிய சரிவை சந்திக்க நேரிடும். அதுவும் வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அதிகம் அவதிப்பட நேரிடும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மொத்தத்தில் அடுத்த ஒரு மாத காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று வேதனை நிறைந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications