Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 முதல் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை பிரமாதமா இருக்கப்போகுது..
Sun Transit In Ayilyam Nakshatra On August 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தைரியம், அதிகாரம், தந்தை, ஆன்மா, மரியாதை, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ராசிகளில் சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். அதேப் போல் நட்சத்திரத்தில் சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்த பூச நட்சத்திரத்தில் சூரியன் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் சூரியன் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்வார். ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

இந்த ஆயில்யம் நட்சத்திரத்தில் சூரியன் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை இருப்பார். ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் 9 ஆவது நட்சத்திரம் தான் ஆயில்யம். இதன் அதிபதி புதன். இந்த நட்சத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது நுண்ணறிவு மற்றும் உள்ளுணர்வின் சக்தியைக் குறிக்கிறது. இப்போது சூரியன் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் தொழிலதிபர்கள் தங்கள் போட்டியாளருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டமாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் அனைத்து வேலைகளிலும் வெற்றிகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அறிவுத்திறனால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமாக இருக்கும். அதுவும் தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்லும் ஆசை இருந்தால், அது நனவாகும். தொழிலில் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications