Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு வெற்றிகளும், செல்வமும் குவியப் போகுது...
Sun Transit In Ayilyam Nakshatra 2024: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்கள். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது கடக ராசியில் பயணித்து வரும் சூரியன், ஆகஸ்ட் 02 ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். ஆயில்யம் நட்சத்திரமானது புதனின் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் சக்தி வாய்ந்ததாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்க போகிறார்கள். இப்போது சூரியன் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதையும், மதிப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இக்காலத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இதன் மூலம் இலக்குகளை எளிதில் அடைவார்கள். முக்கியமாக செய்யும் காரியங்களில் வெற்றிகள் குவியும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டத்தைத் தரப் போகிறது. முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் தலைமைப் பண்புகள் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது மங்களகரமானதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றிகளும், லாபமும் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். முக்கியமாக நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications