Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சூரிய பெயர்ச்சியால் பிப்ரவரி 13 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனை போல பிரகாசிக்கப்போகுது..
Sun Transit In Aquarius On 13 February 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஒரு ராசியில் சுமார் 1 மாத காலம் பயணிப்பார். ஒவ்வொரு மாதமும் சூரியன் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார்.
தற்போது சூரியன் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். கும்ப ராசியின் அதிபதி சனி. இந்த சனியும், சூரியனும் மகன் தந்தையாக இருந்தாலும், இவ்விரு கிரகங்களும் எதிரிகளாக கருதப்படுகின்றனர். என்ன தான் எதிரிகளாக இருந்தாலும், சூரியன் கும்ப ராசிக்கு செல்லும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது பிப்ரவரி மாதத்தில் நிகழும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்துடன், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியையும் பெறுவார்கள் என்பதைக காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மொத்தத்தில் அதிர்ஷ்டம் பிரகாசித்து, பணம், வெற்றியும் குவியும்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்திருந்தால், நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் சூரிய பகவானின் ஆசியால் நிறைவேறும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயுடனான உறவு மேம்படும். தொழிலில் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications