Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
100 ஆண்டுகள் கழித்து ஹோலி நாளில் நிகழும் சூரிய பெயர்ச்சியும், சந்திர கிரகணமும்.. அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Sun Transit And Chandra Grahan On Holi 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரகணங்கள் மிகவும் முக்கியமான நிகழ்வுகளாகும். இவ்விரு நிகழ்வுகளின் தாக்கமும் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதுவும் இந்த நிகழ்வுகள் ஒரே நாளிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ நிகழ்ந்தால், அது இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஹோலி பண்டிகை மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் 2025 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதோடு இதே நாளில் தான் சூரியன் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இப்படி ஹோலி நாளில் நடக்கும் சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர கிரகண நிகழ்வு சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது 100 ஆண்டுகள் கழித்து ஹோலி நாளில் நிகழும் சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர கிரகணத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
ஹோலி நாளில் நிகழும் சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர கிரகணத்தால் மிதுன ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் வணிகர்கள் பெரும் லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாட்டிற்கு செல்ல விரும்பினால், அதற்கான வாய்ப்பு தேடி வரும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முயற்சித்தால், நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஹோலி நாளில் நடக்கும் சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர கிரகணத்தால் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுகூர்கள். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பங்குச் சந்தை, லாட்டரியில் முதலீடுகளை செய்தால், எதிர்பாராத லாபத்தைப் பெறக்கூடும்.
கடகம்
ஹோலி நாளில் நிகழும் சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர கிரகணத்தால் கடக ராசியைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆளுமை மற்றவர்களை ஈர்க்கும் வகையில் மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications