Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
பிப்ரவரி முதல் வாரத்தில் சனி-சூரியனால் உருவாகும் துவாதஷ் யோகம்: இந்த 3 ராசிக்கு அள்ளித் தரப்போகுது..
Sun Saturn Make Dwadash Yog 2025: இந்த 2025 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதன் விளைவாக அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் தெரியும். அதுவும் நவகிரகங்களில் முக்கிய கிரகமாக கருதப்படுவது சனி.
ஏனெனில் இந்த சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் இருப்பதால், சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சனி மற்ற கிரகங்களுடன் இணைந்திருக்கும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் பிப்ரவரி மாதம் 06 ஆம் தேதி சனியும், சூரியனும் ஒன்றுக்கொன்று 30 டிகிரியில் இருந்து, துவாதஷ் யோகத்தை உருவாக்கவுள்ளன.

இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. என்ன தான் சனியும், சூரியனும், மகன் தந்தையாக இருந்தாலும், பகைமை உணர்வு கொண்டவர்கள்.
இருப்பினும் இவ்விரு கிரகங்களின் நிலைகளால் உருவாகும் யோகத்தால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கலாம். இப்போது சனி, சூரியனின் துவாதஷ் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
துவாதஷ் யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கப் போகிறது. குறிப்பாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைத் தரப் போகிறது. வேலை தேடிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு நல்ல வேகை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நிறைய லாபம் கிடைக்கலாம்.
நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். எதிரிகளை திறமையால் வீழ்த்துவீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
கன்னி ராசிக்காரர்களும் துவாதஷ் யோகத்தால் பிப்ரவரி முதல் வாரத்தில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் புத்திசாலித்தனத்தால் தங்கள் வேலைகளில் வெற்றி பெறுவார்கள். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவார்கள். இதன் மூலம் நல்ல பாராட்டைப் பெறுவார்கள்.
வியாபாரம் செய்து கொண்டிருந்தால், நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி பகவானின் ஆசியால் ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு துவாதஷ் யோகம் அதிர்ஷ்டத்தைத் தரப் போகிறது. பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அலுவலகத்தில் சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. எவ்வளவு வேலை இருந்தாலும், குடும்பத்தினருடனும் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். நன்கு சிந்தித்து புத்திசாலித்தனமாக செலவழிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். மொத்தத்தில் சனி மற்றும் சூரியனின் அருளால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications