Latest Updates
-
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்!
சனி, சூரியன் உருவாக்கிய ஷடாஷ்டக யோகம்: ஆகஸ்ட் 16 வரை இந்த 4 ராசிக்கு மோசமா இருக்கும்.. உஷார்..
Sun Saturn Made Shadashtak Yog 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் மற்றும் ராசி மாற்றங்களால் சுப அல்லது அசுப யோகங்கள் அவ்வப்போது உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் நீதிமான் சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இதனால் சூரியன் மற்றும் சனியின் நிலைகளால் ஷடாஷ்டக யோகம் உருவாகியுள்ளது.

ஜோதிடத்தின் படி, சூரியனும், சனியும் ஒருவருக்கொருவர் 6 மற்றும் 8 ஆவது வீடுகளில் இருக்கும் போது ஷடாஷ்டக யோகம் உருவாகும். என்ன தான் சூரியனும், சனியும் தந்தை, மகனாக இருந்தாலும், எதிரிகளாக கருதப்படுகின்றனர். எனவே இவ்விரு கிரகங்களினால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகமானது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த யோகமானது ஆகஸ்ட் 16 வரை நீடித்திருக்கும். ஏனெனில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு செல்வார். இப்போது சனி, சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய மற்றும் அதிக பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது அவ்வளவு சிறப்பான பலனைத் தராது. இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிகைக் குறையலாம். சிலருக்கு நிதி இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் வேலைப்பளு அதிகரிப்பதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். முக்கியமாக பணியிடத்தில் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் பலவிதமான சவால்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த யோக காலத்தில் எந்த வேலையையும் அவசரமாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது எதிர்பாராத அளவில் பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. அடுத்த ஒரு மாத காலம் இந்த ராசிக்காரர்களுக்கு வேதனை நிறைந்ததாக இருக்கும். கைமீறி அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் பண பிரச்சனையால் அவதிப்படக்கூடும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் கைக்கு வராது. அதேப் போல் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட நேரிம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது படுமோசமான இருக்கும். இக்காலத்தில் அனைத்து விஷயத்திற்கும் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications