சூரிய கிரகண நாளில் வரும் மகாளய அமாவாசை மற்றும் கேது சூரிய சேர்க்கை: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..

Solar Eclipse 2024: இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 02 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகண நாளில் தான் மகாளய அமாவாசை வருகிறது. இந்த கிரகணத்தின் போது சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருவார். அதோடு இந்த கன்னி ராசியில் கேதுவும் இருப்பதால், கேது சூரிய சேர்க்கையும் இருக்கும். ஜோதிடத்தின் படி, கிரகணமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதுவும் இந்த சூரிய கிரகண நாளில் கேது சூரிய சேர்க்கையும் நிகழ்ந்துள்ளதால், இதன் தாக்கம் அனைவரது வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக இந்த கிரகணத்தால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கலாம். குறிப்பாக நிதி இழப்பு, வேலை இழப்பு போன்றவற்றை சந்திக்கலாம்.

Sun Ketu Conjunction And Mahalaya Amavasya On Solar Eclipse 2024 These Zodiacs Must Be Careful

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 02 ஆம் தேதி இரவு 09.13 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 03 ஆம் தேதி அதிகாலை 3.17 மணிக்கு முடிவடையும். இந்தியாவில் இரவு நேரத்தில் இந்த கிரகணம் நிகழ்வதால், இந்தியாவில் இதைக் காண முடியாது.

இருப்பினும் இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக கிரகணம் ஏற்பட்டால், அதன் தாக்கம் ஒரு மாத காலத்தில் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. இப்போது 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

சூரிய கிரகணத்தின் போது கடக ராசியின் 3 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழ்ந்திருக்கும். இதனால் மனதில் நம்பிக்கையின்மை அதிகரிக்கும். சிலர் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். இதனால் உறவுகளில் விரிசலும் ஏற்படலாம். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. சிறு வேலையை முடிக்கவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு நிதி இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மகரம்

சூரிய கிரகணத்தின் போது மகர ராசியின் 9 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழ்ந்திருக்கும். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்காமல் போகும். ஒவ்வொரு வேலையிலும் தடையையும், தாமதத்தையும் சந்திக்க நேரிடும். இதனால் மிகுந்த கோபமும், எரிச்சலும் மனதில் ஏற்படும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம். பணம் தொடர்பான எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வராது. தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

துலாம்

சூரிய கிரகணத்தின் போது துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழ்ந்திருக்கும். இதனால் தேவையற்ற செலவுகளால் சிரமப்பட வேண்டியிருக்கும். வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகளும் பிரச்சனைகளால் அவதிப்படலாம். சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மன அழுத்தத்தால் அவதிப்பட நேரிடும். இதன் விளைவாக ஆரோக்கிய பிரச்சனைகளும் அதிகரிக்கும். முக்கியமாக இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, October 1, 2024, 13:33 [IST]
Desktop Bottom Promotion