Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
18 ஆண்டுகளுக்கு பின் கன்னியில் நிகழும் சூரிய-கேது சேர்க்கை: இந்த 3 ராசிக்காரரின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது!
Sun Ketu Conjunction 2024 In Virgo After 18 Years: கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் சூரியன் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த கன்னி ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான கேது பயணித்து வருகிறார். இதனால் கன்னி ராசியில் கேது மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது கன்னி ராசியில் நிகழவுள்ள கேது சூரிய சேர்க்கையால் செப்டம்பர் 16 முதல் அடுத்த 1 மாத காலம் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் கேது மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் அருளால் நிதி நிலை நன்றாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கு புதிய வழிகள் கிடைக்கும். புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் அலுவலகத்தில் கொடுக்கப்படும் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் இக்காலத்தில் திறக்கப்படும். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
