Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
குரு-சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகம்: மார்ச்சில் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்...
Sun Jupiter Make Navpancham Yog 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது தனது நிலைகளை மாற்றும்.
அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும் சேர்ந்து மங்களகரமான யோகத்தை உருவாக்கவுள்ளனர். அதுவும் இந்த யோகமானது மார்ச் மாதத்தில் உருவாகவுள்ளது. அது தான் நவபஞ்ச யோகம். இந்த யோகத்தின் போது சூரியனும், குருவும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருப்பார்கள்.

இந்த யோகமானது தன்னம்பிக்கை, நல்ல அதிர்ஷ்டம், அறிவு மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே இந்த யோகத்தினால் ஒருவர் வாழ்க்கையில் நல்ல செல்வாக்குடன், வாழ்வில் பெரிய அளவில் நல்ல மாற்றத்தையும் காண்பார்கள்.
மேலும் அதிர்ஷ்ட கதவு திறக்கும், தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல உயர்வு ஏற்படும். இப்போது மார்ச் மாதத்தில் சூரியன் மற்றும் குருவால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையில் நற்பெயர் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
சிம்மம்
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்கள் இக்காலத்தில் எடுக்கும் முடிவுகளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சமூகம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். பண பிரச்சனை முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த காலத்தில் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். பழைய முதலீடுகள் அல்லது திட்டங்களிலிருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
தனுசு
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைக்கலாம். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி அதிகரிக்கும்.
மீனம்
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் மீன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி ரீதியாக பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications