Latest Updates
-
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா?
சுக்ராதித்ய ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் வரை அதிர்ஷ்டம் பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...
ஜோதிடத்தில் இரண்டு கிரகங்களின் இணைப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால், அது கிரஹசோமயோஜனம் எனப்படும். ஜூன் மாதத்தில் கிரகங்களின் சேர்க்கையால் பல்வேறு வகையான சுப ராஜயோகங்கள் உருவாகின்றன. சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவு ஜூன் மாதத்தில் உருவாகிறது. மகிழ்ச்சி மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரன் ஜூன் 12 அன்று மிதுன ராசியில் நுழைகிறார்.

கிரகங்களின் ராஜாவான சூரியனும் ஜூன் 15ஆம் தேதி மிதுன ராசியில் பிரவேசித்துள்ளார். எனவே மிதுன ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணைந்ததால் சுக்ராதித்ய யோகம் உருவாகிறது. ஜூலை 7-ஆம் தேதி வரை மிதுனத்தில் சுக்கிரனும், ஜூலை 16-ஆம் தேதி வரை சூரியனும் நீடிக்கிறார்கள்.
சில ராசிக்காரர்கள் சுக்ராதித்ய யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை ஜொலிக்கப் போகிறது. சுக்ராதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவதால் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம் மிதுன ராசிக்கு சாதகமான பலன்களை கொடுக்கப்போகிறது. மிதுன ராசிக்காரர்களின் லக்னத்தில் இந்த சந்திப்பு உருவாகிறது. இதன் மூலம் நீங்கள் பெரும் பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது மற்றும் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் தோன்றும்.
இந்த பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய யோகத்தால் நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. உங்கள் வேலையில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். வரும் காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கும். உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.
கும்பம்
மிதுன ராசியில் சுக்கிரனும் சூரியனும் இணைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. எனவே உங்கள் குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
உங்களை பாடாய்ப்படுத்திய நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பணியில் ஆதாயமமும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.
சுக்ராதித்ய யோகத்தின் முக்கியத்துவம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனும் சுக்கிரனும் இணைந்திருப்பது சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகிறது. சூரியன் ஆதித்யா என்றும் அழைக்கப்படுவதால், சூரியனும் சுக்கிரனும் இணைந்திருப்பது சுக்ராதித்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும்.
இந்த கிரக இணைப்பு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களின் அனைத்து பிரச்சனைகளும் அதன் மூலம் தீர்க்கப்படும். சுக்கிரன் 28 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறது. அதேசமயம் சூரியன் மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
