Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
100 ஆண்டுகள் கழித்து 2025 சனிபெயர்ச்சியில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது..
Solar Eclipse On Saturn Transit In Pisces 2025: இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, வருகிற 2025 ஆம் ஆண்டில் பல அரிய மற்றும் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெற்றவுள்ளன. இந்நிகழ்வுகளால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும்.
குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சனிப் பெயர்ச்சியானது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையையே மாற்றவுள்ளன. அதுவும் இந்த பெயர்ச்சியானது 2025 மார்ச் மாதத்தில் நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது சனி பகவான் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த சனி பெயர்ச்சி நாளில் ஒரு அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது. அது தான் சூரிய கிரகணம்.

ஆம், சனிப் பெயர்ச்சி நாளில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. அதுவும் இந்நிகழ்வானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்நிகழ்வால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
அதுவும் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, திடீர் நிதி நன்மைகள் கிடைக்கவுள்ளன. இப்போது சனிப் பெயர்ச்சி நாளில் நிகழும் சூரிய கிரகணத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சனிப்பெயர்ச்சி நாளில் நிகழும் சூரிய கிரகணத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. குறிப்பாக வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன மற்றும் பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி நாளில் நிகழும் சூரிய கிரகணத்தால் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. அதுவும் புதிய வேலைகளைத் தொடங்கினால் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களின் திட்டங்கள் நல்ல வெற்றியைப் பெறும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மகரம்
சனிப் பெயர்ச்சி நாளன்று நிகழும் சூரிய கிரகணத்தால் மகர ராசிக்காரர்களுக்கு பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதோடு, உயர் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களின் வாழ்க்கை செழிக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications