Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
100 ஆண்டுகள் கழித்து கன்னியில் நிகழும் சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Solar Eclipse 2025: வேத ஜோதிடத்தின் படி, சூரிய, சந்திர கிரகணங்கள் அவ்வப்போது நிகழ்ந்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். என்ன தான் கிரகணங்கள் ஒரு வானியல் நிகழ்வுகளாக இருந்தாலும், ஜோதிடத்தில் ஒரு அசுப நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. இவ்வாறு நிகழும் கிரகணங்களின் தாக்கம் மனித வாழ்க்கையிம் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது புரட்டாசி மாத அமாவாசை நாளில் நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது, சூரியன், சந்திரன் மற்றும் புதன் போன்ற கிரகங்கள் கன்னி ராசியில் இருப்பார்கள். அதே சமயம் இந்த அனைத்து கிரகங்களின் பார்வையும் மீன ராசியில் இருக்கும் சனியின் மீது இருக்கும்.

மொத்தத்தில் இந்த சூரிய கிரகணம் கன்னி ராசியில் நிகழவுள்ளது. இப்படியான நிகழ்வு சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு பிரச்சனையைத் தரக்கூடியதாகவும் இருக்கலாம். இப்போது ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது தொழிலில் நல்ல வெற்றியைத் தரும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுபெறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த கிரகணம் மிகுந்த பலவீனம் அல்லது சோர்வை ஏற்படுத்தும். குடும்பத்தினருடன் சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும். எதிர்பார்த்த முடிவுகளை பெற முடியாமல் ஏமாறக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அவசரமாக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது வேலை மற்றும் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் அதிக சோர்வை சந்திக்க நேரிடும். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் ஏமாந்து போகலாம். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதற்கும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் வெற்றியையும், முன்னேற்றத்தையும் தரும். வேலை மற்றும் தொழிலில் நல்ல பலன்களைப் பெறக்கூடும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. உறவினர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பதட்டங்கள் அதிகரிக்கும். இக்காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக பணம் தொடர்பாக எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுத்துவிட வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். வேலையில் முயற்சிகளுக்கான வெற்றி கிடைக்கும். சிலருக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன அழுத்தம் குறையும். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். அதுவும் உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகளை எழும். மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு பெரிய நிதி மற்றும் வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசரத்தை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான உறவு மோசமடையும். எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியாமல் ஏமாறக்கூடும். இக்காலத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் பெறுவார்கள். நிதி விஷயங்கள் மேம்படும். வாழ்வின் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு மேம்படும். மனநிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











