Latest Updates
-
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
அக்டோபரில் நிகழும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்!
Solar Eclipse 2024: ஏற்கனவே 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 08 ஆம் தேதி நிகழ்ந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 02 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த கிரகணம் இரவு 9.13 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 03 ஆம் தேதி அதிகாலை 3.17 மணிக்கு முடிவடையும். ஜோதிடத்தின் படி, கிரகணமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணமானது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் அந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண இழப்பு ஏற்படும் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் பிரிவினையை சந்திக்கவும் நேரிடலாம். இப்போது சூரிய கிரகணத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது சாதமற்றதாக இருக்கும். காதலித்து வந்தால், பிரிந்து போகும் வாய்ப்புக்கள் உருவாகலாம். திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை சற்று தள்ளிப் போடுவது நல்லது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மன அழுத்தத்தையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் வேலையை கெடுத்து, உங்கள் வேலைக்கே ஆப்பு வைத்துவிடும். முதலீடு செய்யும் திட்டம் இருந்தால், அதைத் தவிர்த்திடுங்கள். இல்லையென்றால் இழப்பை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதுவும் உண்ணும் உணவில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கை டென்சனாக இருக்கும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எந்த முதலீடுகளையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் கோபத்தையும், நடத்தையையும் கட்டுப்படுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் வியாபாரிகள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். சிக்கிய பணம் நினைத்து அதிகம் கவலைப்படுவீர்கள். யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப வராது. பணியிடத்தில் வெற்றி பெற கஷ்டப்பட வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கடனில் மூழ்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டு வரும். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். முக்கியமாக முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றமடைவீர்கள். இக்காலத்தில் உங்களை யாரேனும் ஏமாற்றி உங்கள் பணத்தை திருடலாம். எனவே பண விஷயத்தில் கவனமாக இருங்கள். வியாபாரிகள் எந்த முடிவுகளையும் அவசரப்பட்டு எடுத்துவிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதங்கள் அதிகமாக வரலாம். இதனால் குடும்ப சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப வராது. வணிகர்கள் வழக்கத்தை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications