Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
365 நாட்களுக்கு பின் உருவாகவுள்ள சுக்ராதித்ய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
Shukra Aditya Yoga In Virgo 2024: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. தற்போது சூரியன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியில் ஏற்கனவே செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் பயணித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சூரியன் கன்னி ராசிக்குள் நுழையும் போது சுக்கிரனுடன் சேர்ந்து சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் சுமார் 365 நாட்கள், அதாவது ஒரு வருடம் கழித்து உருவாகவுள்ளது.

இந்த சுக்ராதித்ய யோகமானது மிகவும் மங்களகரமான யோகம். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் வெற்றியைப் பெறவுள்ளார்கள். இப்போது கன்னி ராசியில் உருவாகவுள்ள சுக்ராதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். மேலும் வியாபாரிகள் போட்டியாளருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். இதன் விளைவாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. முக்கியமாக வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவீர்கள். வணிகர்கள் வெற்றிகளுடன், நிறைய லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
