Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
30 ஆண்டுகள் கழித்து நிகழும் சனி-சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு மகத்தான வெற்றியும், செல்வமும் குவியபோகுது..
Shani Sukra Yuti 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க நேரிடும். அதுவும் சில நேரங்களில் நட்பு அல்லது எதிரி கிரகங்களுடன் இந்த சேர்க்கை நிகழலாம். அவ்வாறு கிரக சேர்க்கை நிகழும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மார்ச் 28 ஆம் தேதி நீதிமான் சனி பகவான் மீன ராசிக்கு செல்லவுள்ளார். அப்போது இந்த மீன ராசியில் ஏற்கனவே சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் இந்த சேர்க்கை மீன ராசியில் நிகழ்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக, பிரச்சனைகள் நிறைந்ததாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் மகத்தான வெற்றியையும், செல்வத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது மீன ராசியில் நிகழும் சனி சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் நல்ல மரியாதையையும், கௌரவத்தையும் பெறுவார்கள். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில சமயங்களில் திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை அவரது தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். மற்றவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சு, ஊடகம், மார்கெட்டிங், வங்கி தொடர்பான துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இதுவரை இல்லாத அளவில் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதோடு, அந்த பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications