Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
30 ஆண்டுகள் கழித்து கும்பத்தில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது...
Shani Margi 2024: ஜோதிடத்தின் படி, சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களை தவறாமல் அளிக்கக்கூடியவர். இந்த சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இந்த ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார்.
அதோடு தற்போது வக்ர நிலையில் சனி பகவான் பயணித்து வருகிறார். சனி வக்ர நிலையில் இருப்பதால், அவரால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தடைகள் ஏற்படுவதோடு, பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் சனி பகவான் நவம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைய போகிறார்.

இதனால் நவம்பர் முதல் சில ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் ஆசியால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது மற்றும் தொழிலில் வெற்றிகள் குவியப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதோடு பணத்தை சேமிக்கவும் முடியும். சமூகத்தில் பிரபலமடைவீர்கள். உங்ளின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல பலனை அளிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இந்த இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புத்திசாலித்தனத்தால் உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இதுவரை வேலையில் கஷ்டப்பட்டு வந்தால், நவம்பர் முதல் தொழில் வாழ்க்கை அமோகமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், நவம்பரில் நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் முதல் அதிர்ஷ்ட கதவு திறக்கும். வேலை மற்றும் வியாபாரம் ரீதியாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால், வேலைகள் அனைத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications