Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சனிபகவானின் ஆசியால் பிப்ரவரி முதல் அடுத்த 2 மாதம் இந்த 3 ராசிக்கு ராஜயோக காலமா இருக்கப்போகுது..
Shani Asta 2025: நவகிரகங்களில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். சனி பகவானின் ஆசி ஒருவருக்கு கிடைத்தால் அந்நபரின் வாழ்க்கை செழிப்பாகவும், சிறப்பாகவும் இருக்கும். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் பிப்ரவரி மாதத்தில் தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார். அதுவும் பிப்ரவரி 22 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.

சனி அஸ்தமனமாகும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கவுள்ளன. குறிப்பாக தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, ராஜவாழ்க்கையை வாழவுள்ளனர். இப்போது சனி அஸ்தமனமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். ஏற்கனவே மீன ராசிக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் நடந்து வருகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். சில முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இதுவரை ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவார்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அமைதியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பும், திறமையும் நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான யோகம் கிடைக்கலாம். வணிகம் செய்து வந்தால், நிறைய லாபம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வேலை கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல புதிய வருமான ஆதாரங்களையும் உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்குச் சந்தை அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
இதுவரை நிறைய செலவுகளை சந்தித்து வந்தால், இனிமேல் அந்த செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு, நிறைய பணத்தை சேமிக்க முடியும். சனி பகவானின் ஆசியால் புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications