Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
September Month Rasi Palan 2024: செப்டம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
September Month Rasi Palan 2024: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் செப்டம்பர் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது.
உங்களுக்கு 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் செப்டம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என செப்டம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2024 செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த மாதம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பழைய விஷயங்களை மறந்து புதிய தொடக்கத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். இம்மாதத்தில் வாழ்க்கையின் பல அம்சங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பணம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும். தகுந்த நேரம் வரும்போது உங்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும். காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். உங்கள் உறவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் இல்லையெனில் உங்களுக்கிடையே பிரியும் சூழ்நிலை ஏற்படலாம். மாத இறுதியில், வேலை தொடர்பாக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். ஆரோக்கியத்திலும் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால், கடின உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! கடந்த கால கடின உழைப்பிற்கான பலனை செப்டம்பர் மாதத்தில் பெறுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும், சம்பளமும் உயரும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலையைத் தவிர, உறவுகளிலும் முழு கவனம் செலுத்துவீர்கள். இம்மாதத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிதி நிலை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனையை எதிர்கொண்டால் அதிலிருந்து விடுபடுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். ஆளுமை மேம்படும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். தொழிலில் சில சவால்களை சந்திக்கலாம். ஆனால் முழு நம்பிக்கையுடன் எல்லா சிரமங்களையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் சட்ட விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விரைவில் அதிக லாபம் ஈட்ட தவறான பாதைகளை பின்பற்றாதீர்கள். தாம்பத்திய வாழ்வில் சூழ்நிலைகள் இயல்பாக இருக்கும். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், இம்மாதத்தில் உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் உங்களின் நல்ல குணங்கள் பாராட்டப்படுவதோடு, தேவைப்படும்போது மற்றவர்களுக்கும் உதவுவீர்கள். தொழில் வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவராக இருந்தால் உங்கள் வருங்கால வாழ்க்கை துணையை சந்திக்கலாம். உடன்பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். மாத இறுதியில், நீங்கள் சில விலையுயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்கலாம். இம்மாதத்தில் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள். நீங்கள் மனதளவில் மிகவும் வலுவாக இருப்பீர்கள் மற்றும் சிறிய முடிவுகளை கூட புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் பணியிடத்தில் சவால்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் கடினமாகவும் நேர்மையாகவும் உழைக்க வேண்டும். உங்கள் குறைபாடுகளை சமாளிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், உங்கள் முன்னேற்றக் கனவு நிறைவேறாமல் போகும். தொழிலதிபர்கள் கவனமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். மற்றவர்கள் பேச்சை கேட்டு நடக்காதீர்கள். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவில் இனிமையைத் தக்க வைத்துக் கொள்ள, நீங்கள் எல்லா கசப்புகளையும் மறந்து புதிய தொடக்கத்தை உருவாக்க வேண்டும். அதற்கு பிரச்சனைகளை பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு சுமாராக இருக்கும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்தால் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. சேமிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கவலை மற்றும் சோர்வு காரணமாக உங்கள் உடல்நிலை மோசமடையலாம். உங்கள் ஆரோக்கியத்துடன் விளையாடாதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது. அதற்காக உங்கள் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இதனால் விரைவில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் தற்போதைய பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் தங்கள் வழியில் சில தடைகளை சந்திக்க நேரிடும். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பொறுமையாக இருக்க வேண்டும். உணர்ச்சி ரீதியாக, இந்த மாதத்தில் நீங்கள் மிகவும் பலவீனமாக உணருவீர்கள். மனதில் பல வகையான கவலைகள் இருக்கும். உங்கள் நடத்தையில் முரட்டுத்தனம் காரணமாக, உங்கள் அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும், ஆனால் ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். கடன் இருந்தால், அதை விரைவில் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செப்டம்பர் மாதம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுவீர்கள். எதிர்மறையான எண்ணங்களால் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும், ஆனால் ஒவ்வொரு கஷ்டத்தையும் முழு தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும். தொழில் வாழ்க்கையில் அதிக கவனம் தேவை. உங்கள் வேலையில் அலட்சியமாக இருக்காதீர்கள், இல்லையெனில் கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பு வீணாகிவிடும். பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு சுமாராக இருக்கும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை பேணுங்கள். அன்புக்குரியவர்களின் தவறான நடத்தை உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் உங்கள் தொழிலில் பெரிய மாற்றம் ஏற்படலாம். வேலையை மாற்ற விரும்பினால், உங்களுக்கு சில நல்ல சலுகைகள் கிடைக்கும். நீங்கள் அரசு வேலை செய்தால் வருமானம் கூடும். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. முழு நம்பிக்கையுடன் உங்கள் முடிவுகளை எடுப்பீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். பரம்பரை சொத்துக்களை விற்க முயற்சித்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை வலுபெறும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும். கடன் ஏதேனும் இருந்தால், அதையும் திருப்பிச் செலுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் புதிய வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுசெய்யும் வாய்ப்பு கிடைக்கும். இம்மாதத்தில் பெரிய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். கூட்டு தொழிலைத் தொடங்க விரும்பினால், நீங்கள் ஒரு நல்ல சலுகை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இம்மாதத்தில் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். வீட்டில் சூழ்நிலை மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். இம்மாதத்தில் தாராளமாக செலவு செய்வீர்கள். இம்மாதத்தில் நீங்கள் சில பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது உறவுகளைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் நடத்தை உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இந்நிலையில் நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். தொழில் வாழ்க்கையில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். அதிக வேலைப்பளு காரணமாக அதிக அழுத்தத்தை உணர்வீர்கள். உங்கள் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். இம்மாதத்தில் நிதி பரிவர்த்தனைகள் எதுவும் செய்ய வேண்டாம். மாத இறுதியில் திடீர் உடல்நலக் குறைவு உங்களின் பல திட்டங்களைத் தடுக்கலாம். மேலும் இம்மாதத்தில் மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, செப்டம்பர் மாதத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் சென்று வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வருமானத்தை பெருக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருந்தால், உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். தினமும் யோகா, தியானம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் அனுபவம் வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். வேலையில்லாமல் வேலை தேடுபவர்களுக்கு விருப்பமான வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்பு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படும். ஏற்கனவே திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நிதி விஷயங்களில், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள், இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தையே சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் வாகனத்தை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











