Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
செப்டம்பர் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது.. உங்க ராசிக்கு எப்படி?
Finance Horoscope For September 2024 In Tamil: செப்டம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த செப்டம்பர் மாத கிரக நிலைகளால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. அதில் சில ராசிக்காரர்களுக்கு சூப்பராகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.
முக்கியமாக இந்த செப்டம்பர் மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். அதே சமயம் சில ராசிக்காரர்கள் பண பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். இப்போது 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலையும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் வருமானத்தில் உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலை மீண்டும் தொடங்கப்பட்டு, அதிலிருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்ய நினைத்தால், தங்கள் கூட்டாளர்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடனான வேலை தேடி வரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஷேர் மார்கெட்டில் பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். இதனால் பெரிய அளவில் நிதி நன்மைகள் கிடைக்கும். நிலுவையில உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் நிதி நிலையில் சரிவைக் காண்பீர்கள். இருந்தாலும் கடின உழைப்பினால் உங்கள் நிலையை பலப்படுத்துவீர்கள். இம்மாதத்தில் உங்களில் வேலை நல்ல பாராட்டைப் பெறும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள். வியாபாரிகள் பெரிய முதலீடுகளை செய்யலாம். இந்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் நிதி ரீதியாக உங்களுக்கு நன்றாக இருக்கும். பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நண்பர்களிடமிருந்து பண உதவு கிடைக்கும். வணிகர்களுக்கு அதிக லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளைத் தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் பணியிடத்தில் பெரிய எதிர்ப்பை சந்திப்பீர்கள். உடன் வேலை செய்வோர் உங்களை எதிர்க்கலாம். கூட்டு தொழில் செய்து கொண்டிருந்தால், கூட்டாளர் உங்களை விட்டு பிரிந்து செல்லலாம். இதனால் தொழில் ரீதியாக சற்று மோசமாக இருக்கலாம். நிதி ரீதியாக இம்மாதம் மோசமாக இருக்கும். வியாபாரிகள் எந்த ரிஸ்க்கையும் எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாதத்தின் ஆரம்பத்தில் எதிரிகளை எர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரத்தில் செய்யும் முக்கியமான வேலைகள் கூட பாழாகலாம். இதன் விளைவாக மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது நிதி ரீதியாக நன்றாக இருக்கும். புதிதாக தொடங்க நினைத்த வேலையில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் வேலைகளில் வெற்றி பெறுவார்கள். நண்பர்களிடம் இருந்து நிதி உதவி கிடைக்கும். வணிகர்கள் பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலை மீண்டும் தொடங்கப்படும். அதிலிருந்து நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் நிதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மாதத்தின் முதல் பாதியில் வணிகர்களுக்கு ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். இதனால் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். இருப்பினும் மாத இறுதியில் பெரிய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். ஆனால் மாதத்தின் தொடக்கத்தில் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளின் முக்கியமான வேலைகள் இம்மாதத்தில் பாழாகலாம். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது நிதி ரீதியாக இனிமையாக இருக்கும். இம்மாதத்தில் புதிய வேலைகளைத் தொடங்கினால் நல்ல வெற்றி கிடைக்கும். பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
