Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
நியூமராலஜி படி, இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி என்ன?
September 2024 Monthly Numerology: செப்டம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். ஒவ்வொரு மாதத்தில் நுழையும் போதும், ஒவ்வொருவமே அந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் கொள்வோம். இப்படி ஒருவரது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள அந்நபரின் ராசிக்கு அடுத்தப்படியாக பிறந்ததேதியைக் கொண்டு அறியலாம்.
ராசியைக் கொண்டு கணித்து கூறும் முறை தான் ஜோதிடம். அதேப் போல் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு கணித்து கூறும் முறை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில் 1-9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த 9 எண்களும் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத்தொகை எண்களாகும். அதாவது ஒருவர் 15 ஆம் தேதி பிறந்திருந்தால், அந்நபருக்கு உரிய எண் 1+5 = 6 ஆகும்.

எண் கணிதத்தின் படி, இந்த செப்டம்பர் மாதமானது குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள். இப்போது எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதமானது அதிர்ஷ்டமாக இருக்கும். மேலும் இம்மாதத்தில் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். படைப்பாற்றல் நல்ல பலனைத் தரும். கூட்டு வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் அவசரப்படுவதைத் தவிர்த்து, பொறுமையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இப்படி பொறுமையைக் கடைப்பிடித்தால் அனைத்து வேலைகளும் சிறப்பாக முடிவடையும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், உங்களின் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பேச்சே பல பிரச்சனைகளை இழுத்துவிடும். மேலும் இம்மாதத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். சிறப்பான பலன்களைப் பெற கணபதியை வழிபடுவது நல்லது.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் இனிமையாக இருக்கும். காதலித்து வந்தால் வெற்றி கிடைக்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். இம்மாதத்தில் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். மொத்தத்தில் இம்மாதம் அற்புதமாக, அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் நன்றாக இருக்கும். இம்மாதத்தில் நல்லது கெட்டதை நன்கு அடையாளம் கண்டு கொள்வீர்கள். ஆனால் கோபத்தை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த கோபமே பல வேலைகளை கெடுத்துவிடும். சமூகத்தில் உங்களின் நிலை உயரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் இனிமையாக இருக்கும். இம்மாதத்தில் வெற்றிகள் குவியும். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைககும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications