Latest Updates
-
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
செப்டம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் கஷ்டமானதா இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
September 2024 Unlucky Zodiac Signs: 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், இன்னும் சிலருக்கு கஷ்டமாகவும் இருக்கும். அந்த வகையில் இந்த செப்டம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிரமமாகவும், மன அழுத்தம் நிறைந்ததாகவும் இருக்கப் போகிறது.
மேலும் ஒவ்வொரு வேலையையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும். பணியிடத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் படுமோசமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது கடினமாக இருக்கும். இம்மாதத்தில் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இம்மாதம் டென்சன் நிறைந்ததாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இம்மாதம் கடினமாக இருக்கும்.
மிதுனம்
செப்டம்பர் மாதமானது மிதுன ராசிக்காரர்களுக்கு கஷ்டமானதாக இருக்கும். இம்மாதத்தில் எதிரிகளை உங்களை வீழ்த்த சதி தீட்டுவார்கள். எனவே எதிரிகளிடம் கூடுதல் கவனமாக இருக்க வேணடும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் சதி செய்யலாம். இம்மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது சவாலாக இருக்கும். வருமானத்தை விட உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கடன் சுமை அதிகரித்துவிடும். எடுக்கும் எந்த ஒரு முடிவையும் கவனமாக சிந்தித்து எடுக்க வேண்டும். யாருடைய பேச்சையும் கேட்டு நடக்காதீர்கள். மற்றவர்களின் பேச்சை கேட்டு முடிவெடுப்பத்தை தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு தங்களின் வேலை பற்றிய கவலை அதிகரிக்கும். இம்மாதத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது உங்கள் வேலைக்கே உலை வைத்துவிடும். வணிகர்கள் மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இம்மாதத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமா இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் பல வழிகளில் பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சற்றும் யோசிக்காமல் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். எவர் மீதும் கோபம் கொள்ளாதீர்கள். சொந்தமாக தொழில் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் வேலையில் தலையிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையில் சிக்கி அவதிப்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications