Latest Updates
-
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..
செப்டம்பர் மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
September 2024 Lucky Zodiac Signs In Tamil: 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மாதத்தில் நுழையும் போது பலரது மனதிலும் இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்க காரணம் கிரகங்கள் தான்.
ஏனெனில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் புதன், சூரியன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளனர்.

இப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதன் விளைவாக சில ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது அதிர்ஷ்டமாக இருக்கும். இம்மாதத்தில் பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரைமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக உங்களின் வசதிகள் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செப்டம்பரில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் இம்மாதத்தில் நிறைவேறும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும் நல்ல லாபமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் அற்புதமாக இருக்கும். உங்களைத் தேடி பணம் வரும். மேலும் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தேடி வரும். இந்த மாதத்தில் பல நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் தடையின்றி வேகமாக முடிவடையும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். பண வரவும் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலைகளைத் தொடங்க நினைத்தால், இம்மாதம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நிதி ரீதியாக இந்த மாதம் வழக்கத்தை விட மிகவும் நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மங்களகரமானதாக இருக்கும். இம்மாதத்தில் பலவிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாதத்தில் நீங்கள் சில சாதனைகளைப் புரிவீர்கள். நிதி ரீதியாக இம்மாதம் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications