Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
செப்டம்பர் மாதம் உருவாகும் சுக்ராதித்ய யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்கள் தொழில் கொடிகட்டி பறக்கப்போகிறார்களாம்!
இந்து நாட்காட்டியின்படி, செப்டம்பர் 2024 ஞாயிற்றுக்கிழமை முதல், பாத்ரபாத கிருஷ்ண பக்ஷ சதுர்தசி திதி தொடங்குகிறது, இது செப்டம்பர் 30, 2024 திங்கட்கிழமை, அஷ்வின் மாத கிருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி வரை நீடிக்கும்.
ஜோதிட கணிப்புகளின் படி, செப்டம்பர் 2024 மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். இந்த மாதம் புதன் சிம்மம் மற்றும் கன்னி ராசியிலும், சூரியன் கன்னி ராசியிலும், சுக்கிரன் துலாம் ராசியிலும் சஞ்சரிக்க உள்ளனர். இம்மாதம் சில காலம் கன்னி ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணைவதால் சுக்ர ஆதித்ய யோகம் உண்டாகும். இந்த கிரக மாற்றத்தால் அதிர்ஷ்டப் பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
இந்த மாதம், மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரவு, பொருள் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் பணியிடத்தில் மாற்றம் இருக்கும், பதவி உயர்வு இருக்கும். நீதித் துறையில் தொடர்புடையவர்கள் வெற்றிகளைப் பெறலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தொழிலில் இதுவரை இல்லாத இலாபத்தை எதிர்பார்க்கலாம்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நெருக்கமும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தியைப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அமோகமான மாதமாக இருக்கப்போகிறது. உங்களது எதிரிகளும் உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை தரக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் நிதி பலம் மேலும் அதிகரிக்கும். தொழிலில் இருப்பவர்கள் புதிய உத்திகள் மூலம் தங்கள் வியாபார எல்லையை விரிவுபடுத்தலாம். சில கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு நீங்கள் எதிர்பார்த்த இலாபத்தை அடையலாம்.
வியபாரத்தில் புதிய தொடர்புகள் மூலம் நன்மைகள் உருவாகும். திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும், காதலர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் நன்மைகள் நிறைந்த மாதமாக இருக்கும்.
கன்னி
செப்டெம்பர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் நீண்டகால திட்டம் நிறைவேறும். பார்ட்னருடன் சேர்ந்து வியாபாரம் செய்வதை விட தனியாக வியாபாரம் செய்வது நன்மைகளை அளிக்கும். நீண்ட காலமாக இருந்த கடன் பிரச்சினை இந்த மாதம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.
உங்கள் மூதாதையர் சொத்துக்களை விற்பதன் மூலம் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். உங்களின் எதிரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் மற்றும் பல ஆண்டுகளாக நடந்து வந்த ஒரு வழக்கு பரஸ்பர சம்மதத்துடன் தீர்க்கப்படும்.
விருச்சிகம்
இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதனைகள் நிறைந்த மாதமாக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். விறபனைத்துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் புதிய உச்சத்தை எட்டலாம். இது நிதிநிலையை வலுவாக்கும்.
வேலையில் இருப்பவர்க்ளுக்கு புதிய அதிகாரமும், பொறுப்புகளும் வழங்கப்படும். திருமண வாழ்க்கை எதிர்பார்ப்பதை விட சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
