Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
உங்க ராசியை சொல்லுங்க.. நீங்க அதிகம் வெளிப்படுத்தாத உங்க உண்மையான குணத்தை சொல்றோம்...
Secret Traits Of Each Zodiac Signs: ஜோதிடத்தில் மொத்தம் 9 கிரகங்களும், 12 ராசிகள் உள்ளன. இந்த ராசிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படுகின்றன. இதைக் கொண்டு தான் ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும் கணித்து கூறப்படுகின்றன. மேலும் ராசிகளின் குணங்கள் அவற்றின் உறுப்புக்களின் அடிப்படையிலும் மாறுபடும்.
உறுப்புகள் என்பவை நெருப்பு, நிலம், நீர், காற்று ஆகியவை. இதில் நெருப்பு ராசிகள் என்பவை மேஷம், சிம்மம், தனுசு ஆகும். நில ராசிகள் என்பவை ரிஷபம், கன்னி, மகரம் ஆகும். காற்று ராசிகள் என்பவை மிதுனம், துலாம், கும்பம் ஆகும். நீர் ராசிகள் என்பவை கடகம், விருச்சிகம், மீனம் ஆகும்.

இவற்றில் நெருப்பு ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள், நில ராசிக்காரர்கள் நடைமுறைவாதிகள், காற்று ராசிக்காரர்கள் அறிவார்ந்தவர்கள் மற்றும் நீர் ராசிக்காரர்கள் அதிக உள்ளுணர்வு கொண்டவர்கள் மற்றும் உணர்ச்சிவசப்படுபவர்கள்.
இது தவிர ஒருவரது ராசியைக் கொண்டு, அந்நபரின் எதிர்காலம், பலம், பலவீனம் போன்ற பலவற்றையும் கணித்து கூறலாம். ஆனால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெளியில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கும் ரகசிய குணம் உள்ளது. அந்த குணத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள், வெளியில் எப்போதும் துணிச்சலானவர்களாக வெளியே காணப்பட்டாலும், ஒரு விஷயத்தில் இறங்கும் முன் ஆழ்மனதில் சரியா, தவறா என்று சந்தேகம் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். ஆனால் தன்னுடன் இருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் காளையாக சீறி பாய்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வார்கள். ஆனால் தனது உணர்ச்சிகளை மற்றவர்களிடம் சரியாக வெளிப்படுத்த தெரியாது.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசியைச் சேர்ந்தவர்கள் ஒருவரிடம் அளவுக்கு அதிகமான பாசத்தை காட்டினாலும், பிடிக்காவிட்டால் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசிக்காரர்கள் சுய கௌரவம் அதிகம் கொண்டவர்கள். இவர்கள் மீது பாசம் காட்டினால், அவர்கள் பனிக்கட்டியாக உருகுவார்கள். அதுவே பகையை வெளிப்படுத்தினால், எரிமலை போன்று வெடிப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசிக்காரர்கள் ஒருவர் தப்பு செய்தால், அதை முகத்திற்கு நேராக சொல்வார்கள். இவர்களுக்கு எதையும் ஒளித்து வைத்து பேசத் தெரியாது. பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் யார் மனதையும் கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைப்பார்கள். இவர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால், உயிரையும் கொடுப்பார்கள். இவர்களுக்கு பணத்தை சேமித்து வைக்கத் தெரியாது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்கள் செய்யும் தவறை எளிதில் கண்டுபிடிப்பார்கள். ஆனால் அதை எப்போதும் காட்டி கொடுக்கமாட்டார்கள். சரியான தருணத்தில் பூகம்பமாக வெடிப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் இன்றைய சந்தோஷத்தை அனுபவிக்காமல், எதிர்காலத்திற்காக ஓடிக்கொண்டே இருப்பார்கள். இதனால் கிடைக்கும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்காமல் கடினமாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசிக்காரர்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். தன்னுடைய எதிர்கால வாழ்க்கை பற்றி எந்நேரமும் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவ்வப்போது தனிமையில் இருப்பதாக உணர்வார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த கும்ப ராசிக்காரர்கள் வெளிப்படையாக இருப்பது போன்று அனைவரிடமும் பேசி பழகினாலும், தன்னுள் ஏகப்பட்ட ரகசியத்தை வைத்துக் கொண்டு திரிவார்கள்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த மீன ராசியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்திற்காகவும், தன்னுடன் இருப்பவர்களுக்கவும் சுயநலமாக இருப்பார்கள். எதுவாக இருந்தாலும் துணிந்து இறங்கி செய்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications