Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சனி பாதிப்பில் இருந்து விடுபடும் விருச்சிக ராசிக்காரர்கள்.. இனிவரும் காலம் எப்படி இருக்கும்? விளக்கும் ஜோதிடர்
Scorpio Horoscope 2025 In Tamil: 2025 ஆம் ஆண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவ கிரகங்களின் பயணத்தாலும் விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது?
பொருளாதார நிலை எப்படி இருக்கும். நல்ல வேலை கிடைக்குமா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள், விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் என்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்று பார்க்கலாம்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் வீட்டில் இருந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 8 முதல் 9 ஆம் வீடுகளில் பயணம் செய்யப்போகிறார். ராகு 4 ஆம் வீட்டிற்கும் கேது 10 ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர்.
வேலை தொழில்
கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அர்த்தாஷ்டம சனியால் பலவித சிரமங்களை அனுபவித்திருப்பீர்கள். இனி எல்லாம் சுகமே என்பது போல சனியின் பாதிப்பில் இருந்து விடுபடப்போகிறீர்கள். 2025ஆம் ஆண்டு முழுவதும் குரு பலன் கிடைக்கப்போகிறது. ராகு கேதுவின் பயணமும் சாதகமான இடத்தில் இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்களை காணப்போகிறீர்கள். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும்.
பொருளாதார நிலை
ராகுவும் கேதுவும் உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர். கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடலில் இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பாக்கெட் நிறைய பணம் அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கை
சொந்த பந்தங்களிடையே நெருக்கம் கூடும். தம்பதியரிடையே உறவில் பலம் அதிகரிக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். கணவரிடம் இருந்து அன்பு பரிசுகள் கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சனி இடம் மாறுவதால் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். குருபகவான் பார்வை மே மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண சுப காரியங்கள் நடைபெறுவதில் தடையிருக்காது.
பெண்கள்
மே மாதத்திற்குப் பிறகு குரு இடப்பெயர்ச்சியாகி எட்டாம் வீட்டிற்கு சென்றாலும் குருவின் பார்வை பலனால் பண வருமானம் குறைவில்லாது இருக்கும். அதே நேரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடன் பிறந்தவர்களே உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. இரவு நேர பயணங்களில் கவனம் தேவைப்படும் வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.அக்டோபர் மாதத்தில் அதிசாரமாக நகரும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிற்கு வந்து அமர்வது சிறப்பு. அந்த நேரத்திலும் குருவின் 5ஆம் பார்வையானது உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.
மாணவர்கள்
மே மாதத்திற்குப் பிறகு ராகு நான்காம் வீட்டிற்கும் கேது 10ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைவது சிறப்பு. பணம் பலவழிகளில் இருந்தும் வரும். படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுக ஸ்தான ராகு ஆண்டின் பிற்பகுதியில் சுகத்தையும் சந்தோஷத்தையும் தரப்போகிறார். 2025 ஆம் ஆண்டில் விருச்சிக ராசியில் பிறந்த மாணவர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications