Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
10 ஆண்டுகளுக்கு பின் சனி, சுக்கிரன் உருவாக்கும் சமசப்தக் யோகம்: ஆகஸ்ட்டில் இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
Saturn Venus Make Samsaptak Yog In August 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள், நிலைகள், சேர்க்கைகள் மற்றும் அவற்றால் உருவாகும் சுப மற்றும் அசுப யோகங்களானது மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மாதத்தில் சுக்கிரன் மற்றும் சனியால் சமசப்தக் யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது சனி மற்றும் சுக்கிரன் ஒருவரையொருவர் 7 ஆம் பார்வையில் பார்ப்பதனால் உருவாகிறது. அதுமட்டுமின்றி, சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களினால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளன. இப்போது சனி சுக்கிரனால் உருவாகும் சமசப்தக் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த யோக காலத்தில் சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் மிகப்பெரிய நிதி ஆதாயங்களைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதால் செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவால் இலக்குகளை எளிதில் அடைவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பள்ளது. நிதியைப் பொறுத்தவரை, வழக்கத்தை விட அற்புதமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகமானது நல்ல பலன்களை வாரி வழங்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த யோக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் தைரியம் அதிகரிப்பதால், அச்சமின்றி துணிந்து வேலைகளை செய்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications