Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
30 வருடம் கழித்து ஒன்றிணையும் சனி-சுக்கிரன்: மார்ச்சில் இந்த 3 ராசிக்காரங்க எதிர்பாராத வளர்ச்சியை பாப்பாங்க..!
Saturn Venus Conjunction 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம், இன்னும் ஆழமான தாக்கத்தை உண்டாக்கும். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியில் சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்து பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த மீன ராசிக்கு அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் நுழையவுள்ளார். அதுவும் இந்த சுக்கிர பெயர்ச்சியானது மார்ச் 02 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த மீன ராசி சுக்கிரனின் உச்ச ராசியாகும். இந்த மீன ராசிக்கு சுக்கிரன் நுழையும் போது சனி பகவானும் இருப்பதால், மீனத்தில் சுமார் 30 ஆண்டுகள் கழித்து சனி சுக்கிரனின் அரிய சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 30 வருடம் கழித்து மீன ராசியில் ஒன்றிணையும் சனி சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இருந்தாலும், அவசரப்பட்டு எந்த முதலீடுகளையும் செய்யாமல், நன்கு யோசித்து, அனுபவசாலிகளின் அறிவுரையின் பேரில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வாழ்வில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். எதிரிகளை அசால்ட்டாக தோற்கடிப்பீர்கள். கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும். இக்காலத்தில் அரசு வேலை செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆனால் இக்காலத்தில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் விளைவாக மன அமைதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
