Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
சனிபகவானின் நட்சத்திர மாற்றம் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டத்தை தீர்க்கபோகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரக மற்றும் நட்சத்திர பெயர்ச்சிகளுக்கு முக்கியப்பங்கு உண்டு. ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். சனிபகவான் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு ராசிகள் மற்றும் நட்சத்திரங்களில் பெயர்ச்சி அடைகிறது.
ஏப்ரல் 28, 2025 அன்று, காலை 07:52 மணிக்கு சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சூரியன் ஆளும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் பிரவேசிப்பது சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கப்போகிறது, அதேசமயம் சில ராசிக்காரர்கள் மோசமான விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த பதிவில் சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் அளவிலா அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்து ரிஷப ராசியின் பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நிதிரீதியாக பல நன்மைகள் கிடைக்கும். அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடனான உங்கள் உறவுகள் கணிசமாக மேம்படும். உங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், மேலும் நீங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம்.
கல்வித் துறையில், மாணவர்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும் மற்றும் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். வணிகர்கள் தங்கள் வியாபாரத்தில் நிறைய வெற்றிகளைப் பெறலாம்.
மிதுனம்
சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த ராசியின் பத்தாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். சனிபகவான் அருளால் உங்கள் செலவுகள் குறைந்து பெரிய அளவில் பணத்தை சேமிக்க முடியும். அதுமட்டுமின்றி குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால், அவர்களின் அனைத்து முயற்சிகளிலிருந்தும் வெற்றியை எதிர்பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற பல சலுகைகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் ஆறாவது வீட்டில் சனி சஞ்சரிப்பார். உங்கள் வேலையில் உங்களின் செயல்திறனால் பெரிய விஷயங்களை சாதிக்கலாம், மேலும் உங்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் தேடிவரும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.
சனிபகவானின் அருளால், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். உங்களின் வாழ்க்கையில் புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும், இது ஒட்டுமொத்த பொருளாதார நிலையை அதிகரிக்கும். துலாம் ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், மேலும் இந்த காலகட்டம் முழுவதும் வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்திருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

