Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 7 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப்போகுது...
Saturn Transit In Poorattathi Nakshatra 2024: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களை வழங்குவார். கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இவர் ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும்.
அதே சமயம் சனி பகவான் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வணகர்களுக்கு இரட்டிப்பு முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும். அதுவும் சச ராஜயோகமும் உருவாகியிருப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். முதலீடுகளை செய்தால் நல்ல பலனைப் பெறலாம். அதுவும் இக்காலத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைத் தரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பான பலன்களை அளிக்கும். பணிபுரிபவர்களின் செல்வாக்கு அலுவலகத்தில் அதிகரிக்கும். செயல்திறனுக்கு ஏற்ற பலன் இக்காலத்தில் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனியின் அருளால் நிதி நிலை வலுவடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications