Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
30 ஆண்டுகளுக்கு பின் 2025-ல் மீன ராசிக்கு செல்லும் சனி பகவான்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அள்ளி தரப்போறாரு..
Saturn Transit 2025: ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். கிரகங்களிலேயே ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கும் கிரகம் என்றால் அது சனி தான். அதனால் தான் சனியின் நிலையில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலம் நீடித்திருக்கிறது.
2025 ஆம் ஆண்டில் நுழைந்துவிட்டோம். இந்த ஆண்டில் சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வரும் சனிபகவான், 2025 மார்ச் 29 ஆம் தேதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

அதேப் போல் சனி பகவான் 2024 டிசம்பர் 27 ஆம் தேதி தான் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் 2025 ஏப்ரல் 28 வரை இருப்பார். சனி பகவான் மீன ராசிக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழையவுள்ளார். 2025-ல் மீன ராசியில் நுழையும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சிக்கு பின் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஆனால் ஏழரை சனி தொடங்குவதால், ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். சொல்லப்போனால் நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2025-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வணிகர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சனி பகவானின் ஆசியால் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கன்னி
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். வீடு வாங்கும் கனவு இருந்தால், அது நிறைவேறும். புதிய வாகனம், சொத்து போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைப்பதோடு, நல்ல பலன்களையும் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், சனி பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை தேடி வரம். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications