Latest Updates
-
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்!
சனி சூரிய சேர்க்கையால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Saturn Sun Conjunction 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழக்கையிலும் ஏதோ ஒரு வகையில் காணப்படும். மேலும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.
அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் சூரியன் சனியுடன் சேர்ந்து பயணிக்கவுள்ளார். இக்காலத்தில் சனியின் தாக்கம் சூரியன் மீது அதிகம் இருக்கும். இந்த அற்புதமான சேர்க்கையானது பிப்ரவரி 12 ஆம் தேதி நிகழவுள்ளது. சூரியன் பிப்ரவரி 12 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார்.

இதனால் கும்ப ராசியில் சனி மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது கும்ப ராசியில் நிகழும் சனி சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பிப்ரவரியில் சனி மற்றும் சூரியனின் முழு ஆசியும் கிடைக்கும். இதன் விளைவாக வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காண்பீர்கள். பங்குச் சந்தை மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் திருமண வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பெறுவார்கள்.
முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய வீடு வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும்.
இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த சிரமங்கள் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் திருமணம் செய்யும் வாய்ப்புக்கள் உருவாகலாம். இருப்பினும் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications