Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? -
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. உங்க ராசி என்ன?
Saturn Retrograde In Aquarius On 29 July 2024: ஜோதிடத்தில் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார் மற்றும் இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் பயணிக்கும் சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் நவம்பர் மாதம் வரை இருந்து பின் வக்ர நிவர்த்தி அடைவார்.

சனி வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நிதி நிலை மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது சனி வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்கலாம். சிறிய வேலைகளில் கூட ஏதாவது ஒரு தடையை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த வெற்றியைப் பெற சிரமப்பட வேண்டியிருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். சிலருக்கு நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலைமை நவம்பர் வரை சற்று மோசமாகவே இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஒவ்வொரு வேலையிலும் தடைகளை சந்திக்க நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி நிலைமை சற்று பலவீனமாக இருக்கும். தேவையற்ற செலவுகளால் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும். மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலைகளை முடிப்பதில் தடைகளை சந்திக்க நேரிடும். நவம்பர் வரை வெற்றியைப் பெறுவது என்பது கடினம். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதை சற்று தள்ளிப் போடுங்கள். அவசரப்பட்டு வேலையை விட்டால், பின் வேலை கிடைப்பது என்பது சிரமமாகிவிடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications