Latest Updates
-
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா?
சனி வக்ர பெயர்ச்சி: ஜூன் 29 முதல் அடுத்த 139 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும்..
Saturn Retrograde In Aquarius 2024: வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் கொடிய கிரகமாக கருதப்படுகிறார். ஆனால் உண்மையில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களைத் தருவார். இப்படிப்பட்ட சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 29 ஆம் தேதி சனி பகவான் வக்ரமாகி, அதாவது பின்னோக்கி பயணிக்கவுள்ளார். சனி பகவான் வக்ரமாவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் மோசமாக இருக்கும். இப்போது சனி பகவான் கும்ப ராசியில் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் பொருளாதார நிலை சற்று மோசமாக பாதிக்கப்படும். சிறிய வேலைகளை முடிக்க கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரம் செய்பவர்களும் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலிலும் சிரமங்களை சந்திக்க நேரிடும். நிதி நிலையும் மோசமாக இருக்கும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் கடும் போட்டியை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, அவ்வளவு சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகளால் கஷ்டப்பட நேரிடும். மேலும் பொறுப்புக்களின் சுமை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமக இருக்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை, மோசமாக வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையும் சற்று மோசமாக பாதிக்கப்படலாம்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஜூன் 29 முதல் அடுத்த 139 நாட்கள் சிறு வேலைகளை முடிக்க கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. எதிரிகள் உங்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகுந்த மன உளைச்சலை சந்திக்க நேரிடும். சிலர் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்க வாய்ப்புள்ளதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலையும் சற்று மோசமாக பாதிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications