Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
50 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் வக்ரமாக இருக்கும் சனி பகவான்: இந்த 3 ராசிக்கு புதையல் கிடைக்கும்..
Lunar Eclipse 2025: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் கும்ப ராசியில் இருப்பார். இந்த கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இப்படிப்பட்ட சனி பகவான் இந்த நிகழ்வின் போது வக்ர நிலையில் இருப்பார். அதுவும் மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பார்.
ஆனால் சந்திர கிரகணமானது சனியின் ராசியில் நிகழும் போது, வக்ரமாக இருக்கும் நிகழ்வானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகிறது. இந்த நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்நிகழ்வால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

இதன் விளைவாக தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு, சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் வக்ரமாக இருக்கும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சந்திர கிரகணத்தின் போது சனி வக்ரமாக இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். படைப்பாற்றலும், தலைமைத்துவ திறன்களும் மேம்படும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம் அல்லது முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், சிறப்பான பலனைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
சந்திர கிரகணத்தின் போது சனி வக்ரமாக இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்வீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீரென்று நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மீனம்
சந்திர கிரகணத்தின் போது சனி வக்ரமாக இருப்பதால் மீன ராசிக்காரர்கள் சமூகத்தில் பிரபலமாவார்கள். மேலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். காதலித்து வந்தால், அந்த காதல் ஆழமடையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். இருப்பினும், ஏழரை சனி நடப்பதால், ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications