Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
500 ஆண்டுகளுக்கு பின் தீபாவளி அன்று வக்ரமாக இருக்கும் சனி, குருவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!
Saturn And Jupiter Will Be Retrograde Motion On Diwali 2024: இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி வருகிறது. இந்த தீபாவளி பண்டிகை சற்று சிறப்பு வாய்ந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்நாளில் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியிலும், குரு பகவான் ரிஷப ராசியிலும் வக்ர நிலையில் பயணித்து வருகின்றனர்.
இப்படி 500 ஆண்டுகளுக்கு பின் இவ்விரு கிரகங்களும் ஒன்றாக வக்ர நிலையில் தீபாவளி நாளில் இருப்பதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

இதன் விளைவாக திடீர் பண ஆதாயமும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது 500 ஆண்டுகளுக்கு பின் தீபாவளி அன்று வக்ரமாக இருக்கும் சனி, குருவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனியும், 4 ஆவது வீட்டில் குருவும் வக்ர நிலையில் இருப்பதால், தீபாவளியில் இருந்து இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். இந்த நட்பு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். வசதிகள் அதிகரிக்கும். புதிய வாகனம் மற்றம் சொத்துக்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வணிகம் செய்பவர்கள் எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவானும், முதல் வீட்டில் குரு பகவானும் உள்ளனர். இதனால் தீபாவளியில் இந்த ராசிக்காரர்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவானும், 2 ஆவது வீட்டில் குரு பகவானும் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் இக்காலத்தில் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். எதிர்பாராத பண ஆதாயம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications