Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
சனி பெயர்ச்சியால் அடுத்த வருஷம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Sani Peyarchi 2025 Saturn Transit In Pisces: ஜோதிடத்தில் சனி ஒரு கொடூர கிரகமாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பார். மேலும் கிரகங்களில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். இப்படி ஒரு சுழற்சியை முடிக்க 30 ஆண்டுகள் ஆகும்.
அந்த வகையில் தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2025 மார்ச் வரை இருப்பார். அதன் பின் குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழைவார். இந்த மீன ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதி வரை இருப்பார்.

சனி பகவான் மீன ராசிக்குள் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. மேலும் சில ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்.
முக்கியமாக இந்த சனி பெயர்ச்சி நிகழும் நாளில் தான் 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமும் நிகழவுள்ளது. இப்போது 2025 ஆம் ஆண்டில் நிகழும் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
2025 -ல் நிகழும் சனி பெயர்ச்சியால் ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் நிச்சயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீணட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முதலாக வாழ்க்கை அருமையாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தேவையற்ற செலவுகளில் இருந்து விடுபடுவீர்கள். இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த ஆசைகள் இந்த ஆண்டில் நிறைவேறும். தொழிலில் பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். சனியின் அருளால் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். மேலும் பணம் தொடர்பான கவலைகளும் நீங்கும். குடும்பத்தினருக்கு நல்ல பொழுதைக் கழிப்பீர்கள்.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினால், அதற்கான வாய்பபுக்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ நினைத்தால், நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஆனால் ஜூலை முதல் நவம்பர் வரை குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே இந்த காலகட்டத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications