Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சூரியன் மற்றும் சனி இணைந்து உருவாக்கும் சமசப்த யோகம் இந்த 3 ராசிக்காரர்களை சிம்மாசனத்தில் ஏற்றப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் சீரான இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அதன் பிரதிபலிப்பு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இருக்கும். ஆகஸ்ட் 16ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் பிரவேசித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு பிறகு சனி கும்ப ராசியில் இருக்கிறார். இந்த கிரகங்கள் 180 டிகிரியில் அமைந்துள்ளன. மேலும் சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று 7வது வீட்டில் உள்ளனர். இவ்வாறு நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த இந்த இரண்டு கிரகங்களின் மூலம் சமசப்தக யுகம் உருவாகிறது. இந்த யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சமசப்தக யோகம் என்றால் என்ன?
சமசப்தக யோகம் என்பது இரண்டு கிரகங்கள் நேருக்கு நேர் வரும்போது உருவாகும் யோகமாகும், உதாரணமாக சூரியன் மேஷத்திலும், சனி துலாம் ராசியிலும் இருக்கும்போது இந்த இரண்டு கிரகங்களும் சமசப்தக யோகத்தை உருவாக்கும். இந்த நேரத்தில் இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 7வது வீட்டில் இருக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சமசப்தக யோக பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் பிரபலமாக அதிக வாய்ப்புள்ளது. சமூகத்தில் அவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். விதிவிலக்கான புத்திசாலித்தனம் மற்றும் ஞானத்துடன், இந்த சொந்தக்காரர்கள் எல்லாவற்றிலும் வெற்றியை அடைவார்கள். பணியிலிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் உத்தியோகத்தில் பெரும் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ள காலம் இது.
திருமணமான தம்பதிகளுக்கு, இந்த காலகட்டத்தில் திருமணத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பல விஷயங்களில் வெற்றி பெறுவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன வேலைகள் முடிவடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்தக் காலத்தில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. தொழில் துறையில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். கும்ப ராசிக்காரர்களைப் பொறுத்த வரையில், பொதுவாகவே சமசப்தக் யோகத்தால் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படும்.
மேஷம்
சமசப்தக யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல நாட்கள் தொடங்கும். அவர்களுக்கு பல துறைகளில் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வருமான ஆதாரம் உருவாகும், இதனால் நிதி நிலைமை மேலும் மேம்படும். மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வழிகளில் வருமானம் பெறுவார்கள். புதிய ஆர்டர்கள் அல்லது ஒப்பந்தங்கள் கையகப்படுத்தப்படும். எதிர்காலத்தில் அதிலிருந்து பெரும் லாபம் கிடைக்கும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையிலும் லாபம் கிடைக்கும். அது உங்களுக்கு முழு திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும். பல முதலீடுகளிலிருந்து லாபம் தேடி வரும்.
மிதுனம்
சமசப்தக யோகம் மிதுன ராசிக்காரர்களின் கவலைகள் அனைத்தையும் போக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. பணப் பிரச்சனைகளில் சிக்கியிருப்பவர்கள் இந்தக் காலத்தில் அதிலிருந்து விடுபடுவார்கள். தேவையற்ற செலவுகளை குறைக்கலாம், இதனால் பணத்தை மிச்சப்படுத்தலாம். வாகனம் அல்லது சொத்து வாங்க இது ஒரு நல்ல நேரம்.
பணியிடத்தில் முடிக்கப்படாத வேலைகள் அனைத்தும் முடிவடையும். சுப விசேஷங்கள், சமயச் சடங்குகளில் பங்கேற்பீர்கள். அது மனதிற்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும். வேலை மாற விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
