Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
2025-ல் தொடங்கும் அர்த்தாஷ்டம சனி.. தனுசு ராசிக்கு 2025 எப்படி இருக்கும்? விளக்கும் ஜோதிடர்..
Sagittarius Horoscope 2025 In Tamil: 2025 ஆம் ஆண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவகிரகங்களின் பயணத்தாலும் தனுசு ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது? பொருளாதார நிலை எப்படி இருக்கும். நல்ல வேலை கிடைக்குமா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள், தனுசு ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஆண்டின் முற்பகுதியில் ராசி அதிபதி குரு ஆறாம் வீட்டிலும், சனிபகவான் மூன்றாம் வீட்டிலும் ராகு நான்காம் வீட்டிலும் கேது பத்தாம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். மார்ச் மாத இறுதியில் சனி இடப்பெயர்ச்சியாகி 4 ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார்.

உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி வரப்போகிறது என்றாலும் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கு பாதுகாப்பாக துணையாக ராசிநாதன் குருபகவான் இருக்கப்போகிறார். குரு மே மாதத்தில் ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசியை பார்க்கப்போகிறார். ராகு 3 ஆம் வீட்டிற்கும் கேது 9 ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி ஆண்டு முழுவதும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கப்போகின்றனர்.
வேலை தொழில்
சனி பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கு நகரப்போகிறார் சனிபகவான். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள். கையில் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்தால் அதுவே ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமின் கையெழுத்து போடாதீர்கள் ஏமாந்து போவீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். திடீர் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும்.
பொருளாதார நிலை
ராசி நாதன் குரு பகவான் மே மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் பார்வையால் திடீர் பண வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கும் என்றாலும் சுப விரைய செலவுகளும் கூடவே வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும், சம்பள உயர்வும் தேடி வரும். மே மாதம் முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குருபகவானின் நேரடி பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பண வருமானம் கொட்டப்போகிறது.
குடும்ப வாழ்க்கை
குரு பகவான் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். ஆண்டு முழுவதுமே குருபலன் இருப்பதால் திருமணம் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். திருமணமான தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
பெண்கள்
மே மாதம் வரைக்கும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். வீடு, நிலம் வாங்கும் கைகூடி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பணம் பல வழிகளிலும் வந்து சேரும் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் மளமளவென நடைபெறும்.
உங்களின் உடலிலும் உற்சாகம் கூடும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மீக பயணம் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும். மே மாதத்திற்கு பிறகு நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் பெண்களுக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் மதிப்பு மரியாதை கூடும்.
மாணவர்கள்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் எடுக்கப்போகும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உயர்கல்வி யோகம் கை கூடி வரப்போகிறது. எதையும் தைரியத்துடனும் புது தெம்புடன் எதிர்கொள்வீர்கள். செழிப்பான வாழ்க்கை அமையும். சோம்பேறித்தனத்தில் இருந்து விடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதிலும் உடலிலும் உற்சாகம் கூடும். தேர்வு நேரங்களில் ஆலய வழிபாடு செய்வது அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும். அர்த்தாஷ்டம சனியாக இருப்பதால் அதிக அளவில் ஆட்டம் போட வேண்டாம். பண விசயங்களில் கவனம் தேவை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











