Rose Day 2025: ரோஸ் டே.. உங்க லவ்வர் ராசிக்கு எந்த நிற ரோஸ் கொடுத்தா.. லவ் ஸ்ட்ராங் ஆகும்-ன்னு தெரியுமா?

Rose Day 2025: காதலர் வாரத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுவது தான் ரோஸ் டே என்னும் ரோஜா தினம். ரோஜா பூக்கள் காதலின் சின்னமாகும். அன்று முதல் இன்று வரை பெரும்பாலும் காதலை தெரிவிக்க ரோஜாக்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்பட்ட ரோஜாக்களில் பல வண்ணங்கள் உள்ளன. ஒவ்வொரு ரோஜாப் பூவின் நிறமும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொண்டுள்ளன. இதனாலே காதலை தெரிவிக்க நினைக்கும் பலரும் எந்த நிற ரோஜாக்களைக் கொடுப்பது என்று யோசிப்பார்கள்.

Rose Day 2025 Perfect Rose for Your Partner According to their Zodiac Sign

நீங்களும் ரோஸ் டே அன்று உங்கள் துணைக்கு எந்த நிற ரோஜாப்பூவைக் கொடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளீர்களா? அப்படியானால் உங்கள் துணையின் ராசிக்கு எந்த நிற ரோஜா பூ ஏற்றதோ அதை வாங்கி கொடுங்கள். இதனால் உங்களுக்கு இடையேயான பிணைப்பும், அன்பும், பாசமும் இன்னும் வலுவடையும். இப்போது எந்த ராசிக்கு எந்த நிற ரோஜாப்பூ சிறந்ததாக இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

உங்கள் காதலன் அல்லது காதலி மேஷ ராசியைச் சேர்ந்தவரானால், நீங்கள் அவர்கள் மீது முழு கவனத்தையும் மிகுந்த அக்கறையையும் கொண்டிருப்பதை தெரியப்படுத்த விரும்பினால், சிவப்பு நிற ரோஜாப்பூவைக் கொடுங்கள். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய்க்கு உரிய நிறம் சிவப்பு. எனவே மேஷ ராசிக்காரர்களை கவர நினைத்தால், சிவப்பு நிற ரோஜாப்பூவை வாங்கிக் கொடுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். உங்கள் துணையின் ராசி ரிஷபம் என்றால் அவர்களுக்கு பிங்க் நிற ரோஜாப்பூவை வாங்கிக் கொடுங்கள். ஏனெனில் இந்த நிற ரோஜாப்பூவை வாங்கிக் கொடுத்தால், அது உங்கள் துணையின் மென்மையான ஆளுமையை பிரதிபலிக்கும். எனவே இந்த பிங்க் நிற ரோஜாப்பூவை வாங்கிக் கொடுத்து, உங்கள் துணையை சந்தோஷப்படுத்துங்கள்.

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன். உங்கள் காதலன்/காதலி மிதுன ராசியை சேர்ந்தவர்களானால், அவர்கள் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களை விரும்புவார்கள். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு கருப்பு நிற ரோஜா சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இந்த நிறம் இருளையும் ஆழத்தையும் குறிக்கிறது. புதன் ராசிநாதனாக இருப்பதால், இவர்கள் தீவிரத்தையும் ஆழத்தையும் விரும்புகிறார்கள். எனவே, ரோஜா தின கொண்டாட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு கருப்பு நிற ரோஜாவைப் பரிசளிப்பது நல்லது.

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். உங்கள் காதலன்/காதலி கடக ராசியை சேர்ந்தவரானால், அவர்களுக்கு வெள்ளை நிற ரோஜாவைக் கொடுப்பது சிறந்ததாக இருக்கும். இந்த வெள்ளை நிறம் ராசிநாதனான சந்திரனின் நிறத்துடன் எதிரொலிக்கிறது. எனவே இந்த இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு எந்த ரோஜாவைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் யோசித்தால், வெள்ளை ரோஜா சிறந்ததாக இருக்கும்.

சிம்மம்

உங்கள் காதலன்/காதலி சிம்ம ராசியை சேர்ந்தவரானால், அவர்களுக்கு உரிய நிற ரோஜாவை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கும். இந்த ராசியின் அதிபதி சூரியன் என்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு ஆரஞ்சு நிற ரோஜாவைக் கொடுப்பது சிறந்ததாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியை உங்கள் காதலன்/காதலி சேர்ந்தவரானால், அவர்களை ரோஸ் டே அன்று மகிழ்விக்க நினைத்தால், பச்சை நிற ரோஜா பூவை வாங்கி கொடுப்பது சிறந்ததாக இருக்கும். ஏனெனில் பச்சை புதனுக்கு உரியது. எனவே இந்த நிற ரோஜாவை வாங்கிக் கொடுத்தால், அது உங்கள் அன்பை வெளிப்படுத்தும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆசியை பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை ஆறுதல்படுத்துவதில் எப்போதும் மகிழ்ச்சி அடைவார்கள் மற்றும் தங்கள் பலவீனமான பக்கத்தை மற்றவர்கள் முன் வெளிப்படுத்த விரும்ப மாட்டார்கள். இப்படிப்படட துலாம் ராசிக்காரர்களுக்கு பிங்க் நிற ரோஜா சிறந்ததாக இருக்கும்.

விருச்சிகம்

உங்கள் காதலன்/காதலி விருச்சிக ராசியை சேர்ந்தவரானால், அவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவதோடு, கோபமும் படுவார்கள். இத்தகையவர்களுக்கு ரோஜா தினத்தன்று சிவப்பு நிற ரோஜாவைப் பரிசளித்தால் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த ராசியின் அதிபதி செவ்வாய் என்பதோடு, சிவப்பு நிறம் செவ்வாய் பகவானுக்கு உரியது. எனவே இந்த சிவப்பு நிற ரோஜாவை கொடுக்கும் போது, அவர்களை சந்தோஷப்படுத்தலாம்.

தனுசு

தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் சாகச குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் உறவுகளில் தங்கள் துணை இறுதிவரை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆச்சரியங்களை விரும்புவார்கள். அது பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, சிறப்பாக உணர்வார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு மஞ்சள் நிற ரோஜாப்பூவைக் கொடுப்பது சிறந்ததாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் பொருள் சார்ந்த தேவையைப் பற்றி தைரியமாகப் பேசுவார்கள்/ தன்னம்பிக்கை கொண்டவர்கள். காதலிக்கும் போது, ​​தங்கள் துணை தங்களை சமமாக மதிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். உங்கள் காதலன்/காதலி இந்த ராசியை சேர்ந்தவரானால், அவர்களுக்கு சிவப்பு நிற ரோஜாவைக் கொடுப்பது சிறந்ததாக இருக்கும்.

கும்பம்

உங்கள் காதலன்/காதலி கும்ப ராசியை சேர்ந்தவரானால், இவர்கள் மனிதாபிமானம் கொண்டவர்கள் மற்றும் எளிமையானவர்கள். இந்த ராசியின் அதிபதி சனி. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு நீல நிற ரோஜாவைக் கொடுப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் ரகசியமானவர்கள், இரக்கமுள்ளவர்கள், கலைநயமிக்கவர்கள். தீவிரமான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள். காதலிக்கும்போது தங்கள் துணை கூடுதல் கவனத்துடனும் அன்புடனும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு மஞ்சள் நிற ரோஜாப்பூ சிறந்ததாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion