Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
மீனத்தில் உருவாகவுள்ள அபூர்வமான ஷத்கிரக யோகம்: இந்த 4 ராசிக்கு கோடி கோடியாய் பணம் குவியப்போகுது...
Rare Shatgrahi Yog Form In Pisces: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில நேரங்களில் கிரகங்கள் நகரும் போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 6 முக்கிய கிரகங்கள் மீன ராசியில் கூடி ஒரு அரிய மற்றும் அபூர்வமான யோகத்தை உருவாக்க உள்ளன. அது தான் ஷத்கிரக யோகம். இந்த யோகமானது புதன், சூரியன், ராகு, சந்திரன், சனி மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களினால் உருவாகவுள்ளன. இந்த அபூர்வமான சேர்க்கை பல ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளன.

இந்த யோகத்தால் தொழில், உறவு, நிதி நிலை போன்றவற்றில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் காணக்கூடும். அதுவும் இந்த ஷத்கிரக யோகமானது 2025 மார்ச் மாதத்தில் உருவாகவுள்ளது. இப்போது இந்த ஷத்கிரக யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஷத்கிரக யோகமானது பல நன்மைகளை வாரிவழங்கவுள்ளது. முக்கியமாக இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கப் போகிறது. வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும், அதை சமாளித்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சில எதிர்பாராத சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், புத்திசாலித்தனத்தால், அதையும் சமாளிப்பார்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஷத்கிரக யோகமானது தொழிலில் நல்ல பலன்களை வழங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கையில் சவால்களை சந்தித்தாலும், அதை எளிதில் சமாளிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஷத்கிரக யோகமானது முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களை வழங்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய திட்டங்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலைக்கும், குடும்பத்துக்கும் இடையே சமநிலையை பேணுவதன் மூலம், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஷத்கிரக யோகம் எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளை வழங்கும். மேலும் இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடைந்து, அதன் மூலம் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக நீண்ட நாட்களாக இருந்த குடும்ப பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செய்பவர்களுக்கு ஏராளமான அளவில் லாபம் கிடைத்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications