ராகு கும்ப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொன்னான நேரம் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில் ராகுவுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு, பெரும்பாலும் தீய விளைவுகளை ஏற்படுத்துபவராக அறியப்படுகிறார். ராகு சுமார் 18 மாதங்கள் ஒரு ராசியில் சஞ்சரிக்கிறது. இது பெரும்பாலும் தீய சம்பவங்களின் தீவிரத்தை அதிகரிக்கிறது. அது எப்போதும் வக்ர இயக்கத்தில் செல்வதால் ராகுவின் சாதக, பாதக பலன்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.

Rahu Transit in Aquarius Gives Auspicious Results to These Zodiac Signs

ஜோதிட ரீதியாக ராகு தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார். ராகு ஆகஸ்ட் 18 ஆம் தேதி கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்து மே 18, 2025 அன்று மீன ராசியிலிருந்து விலகி மீண்டும் கும்ப ராசிக்குள் நுழைகிறார். அதன்பின், 2026 நவம்பர் 24 வரை ராகு இந்த ராசியில் இருப்பார்.

ஆனால் இந்த நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தருகின்றன. இதன் மூலம் பல சாதகமான பலன்களைப் அவர்கள் பெறுவார்கள். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு பல அனுகூலமான பலன்களைத் தருகிறார். பெரும்பாலும் இந்த நேர்மறையான மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். உங்களின் கடின உழைப்பிற்கான பலன்கள் உங்களைத் தேடி வரும். தந்தையின் உதவியால் வாழ்வில் வரும் தடைகள் அனைத்தையும் முறியடிப்பீர்கள்.

சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதுமட்டுமின்றி, ராகு உங்களுக்கு பொருளாதாரரீதியாகவும் நல்ல பலன்களைத் தருகிறார்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் பல வழிகளில் பலன்களைத் தருகிறது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் இழந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. திடீரென தேடிவரும் செல்வம் உங்களை ஆச்சரியப்படுத்தும். நிறுத்தப்பட்ட வேலைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டகால நிதிப் பிரச்சனைகள் இருந்தால் அதற்கான தீர்வைப் பெறலாம்.

வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் எல்லாம் நீங்கி உத்தியோகத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும். ராகு 2025 வரை அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருகிறார். அற்புதமான சாதனைகள் இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் லக்னத்திற்கு ராகு மாறுகிறார். அது மட்டுமின்றி கும்பத்தின் அதிபதியாக சனிபகவான் இருக்கிறார். இது உங்கள் வாழ்க்கையை அனைத்து வகையிலும் மாற்றுகிறது. கும்ப ராசிக்காரர்களுக்கும் இது பலன் தரும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.

தொழில் தேடல் வெற்றியடைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்வில் நிம்மதியும் மனநிறைவும் இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். எதையும் சிந்திக்காமல் செயல்படாதீர்கள்.

மீனம்

மீன ராசியினருக்கு ராகுவின் ராசி மாற்றம் பெரிய வரத்தை அளிக்கப்போகிறது. அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய நல்ல வாய்ப்புக் கிடைக்கும். மேலும் அவர்களின் வாழ்க்கையில் செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கும்.

மீன ராசியினருக்கு தொழில் மாற்றங்கள் எல்லா வகையிலும் சாதகமாக அமையும். நிதி நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். வாழ்க்கை விரும்பியபடி மாறும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, August 8, 2024, 22:40 [IST]
Desktop Bottom Promotion