Latest Updates
-
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா?
ராகு நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 08 முதல் இந்த 3 ராசிக்காரங்க மிகவும் கவனமா இருக்கணும்...
Rahu Transit 2024 In Uthirattathi Nakshatra: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அதேப் போல் நட்சத்திரத்தையும் கிரகங்களை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நிழல் கிரகமான ராகு தற்போது மீன ராசியில் மற்றும் ரேவதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 08 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். உத்திரட்டாதி நட்சத்திரமானது சனி பகவானின் நட்சத்திரமாகும்.

ராகு இந்த நட்சத்திரத்தில் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் செல்வதால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு நிதி இழப்புக்கான வாய்ப்புக்களும் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும் இந்த ராசிக்காரர்களின் எதிரிகள் அதிக ஆதிக்கம் செலுத்தலாம். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் செய்யும் வேலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக உணர்ச்சிவசப்பட்டு பல முடிவுகளை எடுக்க நேரிடும். எனவே சற்று கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படக்கூடும். முக்கியமாக பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் திடீரென்று வேலை குறையும். சிலருக்கு வேலை போகவும் வாய்ப்புள்ளது. இடமாற்றத்திற்கான வாய்ப்புக்களும் உள்ளன. பணிடத்தில் உயர் அதிகாரிகளுடன் தகராறு ஏற்படலாம். அதிக கோபப்பட நேரிடும். இந்த கோபத்தாலேயே பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே சற்று கவனமாக இருங்கள்.
கடகம்
ராகு நட்சத்திர பெயர்ச்சியானது கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆன்மீகத்தில் நாட்டம் குறையும். தந்தையின் ஆரோக்கியம் மோசமாகக்கூடும். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வேலை தொடர்பாக நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும். ஆனால் இந்த அலைச்சலால் வெற்றிலோ, லாபமோ கிடைக்காது. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications