Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
18 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் உருவாகும் கிரகண யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Rahu Moon Make Grahan Yog On 25 July 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப மற்றும் அசுப யோகங்களையும் உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் நிழல் கிரகமான ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 25 ஆம் தேதி சந்திரனும் மீன ராசியில் நுழைவதால், ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது ஒரு அசுப யோகம். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த அசுப யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக நிதி விஷயங்களில் மற்றும் ஆரோக்கிய விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இப்போது ராகு சந்திரன் சேர்க்கையால் உருவாகியுள்ள கிரகண யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அப்படி மேற்கொள்ளும் பயணங்களின் போது தங்கள் உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும். அதேப் போல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் ரீதியாக ஏதேனும் பயணங்களை மேற்கொள்ள நேரிட்டால், எந்த ஒரு ஒப்பந்தங்களையும் இக்காலகட்டத்தில் முடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உணர்வீர்கள். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படலாம். இப்பிரச்சனைகளை தவிர்க்க சிவனை வழிபடுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். குறிப்பாக வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். மேலும் எந்த ஒரு புதிய வேலையையும் இக்காலத்தில் தொடங்குவதைத் தவிர்த்திடுங்கள். உங்களின் பிரச்சனைகள் குறைய சிவபெருமானின் மந்திரமான ஓம் நமசிவாய மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில விஷயங்களால் தாயாருடன் மனக்கசப்பு ஏற்படலாம். முக்கியமாக இக்காலத்தில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அதேப் போல் கடனை வாங்குவதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த யோகத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க சிவபெருமானுக்கு வில்வ இலையால் பூஜை செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications