Latest Updates
-
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
50 ஆண்டுகளுக்கு பின் சனியின் நட்சத்திரத்திற்கு சென்றுள்ள ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Rahu Enters Shani's Uthirattathi Nakshatra: ஜோதிடத்தில் நவகிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணிக்கப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரங்களையும் மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் தான் ராகு. இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் இருப்பார் மற்றும் இவர் எப்போதும் வக்ர நிலையில் தான் பயணிப்பார். மேலும் இந்த ராகுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ராகு கடந்த ஜூலை 08 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். அதுவும் 50 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார்.

உத்திரட்டாதி நட்சத்திரமானது சனி பகவானின் நட்சத்திரமாகும். என்ன தான் ராகுவிற்கும், சனி பகவானுக்கும் நட்புறவு இல்லாவிட்டாலும், ராகுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இப்போது ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் ராகுவும், 2 ஆவது வீட்டில் சனி பகவானும் உள்ளனர். இதனால் ராகுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் தைரியம் அதிகரிக்கும். உங்கள் வேலை திருப்தியாகவும், நல்ல லாபத்தையும் தருவதாக இருக்கும். வியாபாரிகள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படலாம். வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றத்தைக் காணக்கூடும். சிலருக்கு வேலை மாற்றம் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புக்களும் உள்ளன. ஆனால் இந்த மாற்றம் வாழ்க்கையில் நல்ல பலனைத் தரும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். வியாபாரம் விரிவடையும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களைத் தரும். முக்கியமாக வருமானத்தை அதிகரிக்கும். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் அதை முயற்சித்தால் நல்ல பலனைப் பெறலாம். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். முதலீடுகளை இக்காலகட்டத்தில் செய்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications