Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
உங்க லவ்வர் ராசி என்னனு சொல்லுங்க? அவங்களுக்கு எப்படி காதலை பிடிக்கும்னு நாங்க சொல்றோம்...!
Propose Day 2025: காதலர் தினம் நெருங்கி விட்டது. பலரும் தங்கள் மனதில் உள்ள காதலை தங்களுக்கு பிடித்தவர்களிடம் சொல்வதற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் யாருடன் செலவிட விரும்புகிறீர்களோ அவர்களும் உங்களை விரும்பும் போது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை உணர்வீர்கள்.
எனவே உங்கள் அன்புக்குரியவரிடம் நீங்கள் காதலை சொல்ல விரும்பினால் அதை சரியாக செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில் நீங்கள் விரும்புபவருக்கு பிடிக்காத வகையில் நீங்கள் காதலை சொன்னால் உங்கள் காதல் தோல்வியில் முடிவடைய வாய்ப்புள்ளது. ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயம் என்று சில விஷயங்கள் இருக்கும். அதை சரியாக தெரிந்து காதலை முன்மொழிவது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

ஒருவரின் ஆளுமை மற்றும் அவர்களுக்கு பிடித்த விஷயத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் துணையின் ராசி என்னவென்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்த விதத்தில் காதலை முன்மொழிவது உங்கள் காதலை நிறைவேற்றும். இந்த பதிவில் ஒவ்வொரு ராசிக்கும் காதலை எப்படி சொன்னால் பிடிக்குமென்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தைரியமான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள், மேலும் வலுவான காதல் உறவை விரும்புபவர்கள். எனவே, நீங்கள் அவர்கள் மீது ஆர்வமாக இருந்தால், அவர்களுக்குப் பிடித்த சிலிர்ப்பூட்டும் இடத்திற்குச் செல்வதை விட அவர்களை மகிழ்ச்சியாக மாற்றுவது எதுவுமில்லை. எனவே அவர்களிடம் நீங்கள் காதலை சொல்ல விரும்பினால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் சென்று அதை செய்யுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எளிமையான மற்றும் அமைதியான ஆளுமை கொண்டவர்கள் மற்றும் எதார்த்த அணுகுமுறை கொண்டவர்கள், அதிக செலவு செய்பவர்கள் அல்ல. எனவே, ஒரு ரிஷப ராசிக்காரரை மணக்க முன்மொழியும்போது அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது அவர்களுக்கு பிடிக்காது. எனவே அவர்களை கவரும் படி எளிமையாக காதலை சொல்லவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சமூக பட்டாம்பூச்சி போன்றவர்கள், அவர்கள் இதயத்தில் அதிக காதல் உணர்வு கொண்டவர்கள். எனவே, மிதுன ராசிக்காரர்கள் விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு ஒரு விஷயம் நடந்தவுடன் அதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதுதான். எனவே நீங்கள் மிதுன ராசிகாரர்கள் காதலித்தால் அதை அனைவரின் முன்னிலையிலும் குறிப்பாக அவர்களின் நண்பர்களின் முன்னிலையில் செய்யுங்கள்.
கடகம்
நீங்கள் ஒரு கடக ராசிக்காரரை காதலித்தால், அவர்கள் எவ்வளவு உணர்திறன் வாய்ந்தவர்கள் என்பதை நன்கு அறிவீர்கள். கடக ராசிக்காரர்களை காதலுக்கு சம்மதிக்க வைப்பதற்கான ரகசியம், முதலில் அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதும், இரண்டாவதாக விஷயங்களை எளிமையாக ஆனால் அர்த்தமுள்ளதாக செய்வதும் ஆகும். அவர்கள் ஓய்வில் இருக்கும் போது அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்களிடம் காதலை சொல்லுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அரவணைப்பது, கட்டிப்பிடிப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களை விரும்புகிறார்கள், இது அவர்களுக்கு அதிக கவனம் கொடுப்பதை உறுதி செய்கிறது. நீங்கள் சிம்ம ராசிக்காரர்களிடம் காதலை முன்மொழிந்தால், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதத்துடன், சில பூக்களைக் கொடுத்து அவர்களிடம் காதலை வெளிப்படுத்துங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பரிபூரணவாதிகள் என்றும், உள்ளுணர்வை நன்கு உணரக்கூடியவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள், எனவே உங்கள் காதல் முன்மொழிவு ஒரு ஆச்சரியமாக இருக்க வேண்டுமென்றால், நீங்கள் மிகவும் கவனமாக அதை செய்ய வேண்டும். யாரும் இல்லாத போது, அவர்கள் எதிர்பார்க்காத போது தைரியமாக உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் சமநிலைக்கும், இராஜதந்திரத்திற்கும் பெயர் பெற்றவர்கள், மேலும் அவர்கள் காதல் மீது அதிக விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களிடம் முடிந்த வரை ரொமான்டிக்காக உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். முடிந்தால் திரைப்பட பாணியில் வெளிப்படுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தைரியசாலிகள் மற்றும் மர்மமானவர்கள். எனவே அவர்களை காதலில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமானது. உங்களின் காதலை அவர்களிடம் வெளிப்படுத்துவதாக இருந்தால் தன்னம்பிக்கையுடன், தைரியமாக கொஞ்சம் வித்தியாசமான வழியில் வெளிப்படுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ரிஸ்க் எடுத்து அவ்வப்போது சாகசத்தில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே, அவர்களின் சாகச உணர்வுக்கு தீனிபோடும் ஒரு இடத்திற்கோ அல்லது நிகழ்ச்சிக்கோ அழைத்துச்சென்று உங்களின் காதலை வெளிப்படுத்துங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகிறார்கள். அவர்கள் ஆடம்பரமான உணவகங்களுக்குச் செல்லவும், ஆடம்பரமாக உடையணிவதையும் விரும்புகிறார்கள். எனவே ஆடம்பரமான சூழலில், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரமான மனநிலை கொண்டவர்கள், வழக்கத்திற்கு மாறான விஷயங்களில் ஈடுபட விரும்புகிறார்கள். எனவே உங்கள் காதலை வெளிப்படுத்தும் விதத்தில் நிறைய படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள், அது அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும்.
மீனம்
மீனம் ஒரு நீர் ராசி என்பதால் அவர்கள் கடல் சார்ந்த இடத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே அவர்களிடம அந்த இடத்தில் வைத்து காதலை வெளிப்படுத்துங்கள். மேலும் அவர்கள் உள்முக சிந்தனையாளர்கள் மற்றும் கூச்ச சுபாவமுள்ளவர்கள் என்பதால் திருமணத்திற்குப் பிறகும் அவர்களுக்கு பிரைவசி தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












