Latest Updates
-
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.!
உங்க ராசி என்னன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு சுவாரஸ்யமான உண்மையை சொல்றோம்...
Planets And Personality Traits: ஜோதிடத்தின் படி, மனித வாழ்க்கையில் கிரகங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது தவிர கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒருவரது குணாதிசயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளும் அதிபதிகளைக் கொண்டுள்ளன. இந்த அதிபதிகள் அந்த ராசிக்காரர்களின் குணாதிசயங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நீங்கள் உங்களின் குணாதியங்கள், நடத்தை, வலிமை, சிந்தனை, சூழ்நிலைகளை கையாளும் விதம் போன்றவை உண்மையில் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் ராசியின் அதிபதியைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். இப்போது ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களின் குணங்கள் என்னவென்பதைக் காண்போம். அதைக் கொண்டு உங்களின் குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

சூரியன்
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியை சேர்ந்தவராக இருந்தால், நீங்கள் தன்னம்பிக்கை கொண்டவராகவும், வெளிப்படையாகப் பேசுபவராகவும், தலைமைப் பதவிகளை நோக்கிச் செல்லும் குணம் கொண்டவராகவும் இருப்பீர்கள். மேலும் நீங்கள் மற்றவர்களால் அதிகம் பாராட்டப்பட விரும்புவீர்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பிரகாசிக்க விரும்புவீர்கள்.
சந்திரன்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியைச் சேர்ந்தவராக இருந்தால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள் மற்றும் மிகவும் சென்சிடிவ்வான நபர். உணர்ச்சி ரீதியான பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பீர்கள். வலுவான தொடர்பை கொண்டிருப்பீர்கள். உங்களின் மனம் அதிகம் அலைபாயும். மற்றவர்கள் மீது உண்மையான மற்றும் நிலையான அக்கறை காட்டுவீர்கள்.
புதன்
புதனை அதிபதியாக கொண்ட மிதுனம் மற்றும் கன்னி ராசிகளை சேர்ந்தவராக இருந்தால், நீங்கள் அதிகம் ஆர்வமுள்ளவர்களாகவும், வெளிப்படையாகப் பேசுபவராகவும், அறிவுபூர்வமாக ஈடுபாடு கொண்டவராகவும் இருப்பீர்கள். படிப்பில் அதிக ஆர்வம் காட்வீர்கள். வேகமாக சிந்தனையின் காரணமாக தொடர்பு கொள்வதில் வல்லவராக இருப்பீர்கள்.
சுக்கிரன்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களாக இருந்தால், நீங்கள் வசீகரமான அழகு மற்றும் கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள். மிகவும் ரொமான்டிக்கானவர்கள் மற்றும் அழகை போற்றுவீர்கள். கலைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும். எந்தவொரு சூழலிலும் நீங்கள் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பீர்கள்.
செவ்வாய்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷம் மற்றும் விருச்சிக ராசியை சேர்ந்தவர்களாக இருந்தால், நீங்கள் மிகவும் தைரியமானவர், ஆற்றல் நிறைந்தவர் மற்றும் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பீர்கள். ஒரு விஷயத்தை செய்வதில் இருந்து பின்வாங்கமாட்டீர்கள். பேசுவதை விட செயலில் எதையும் வெளிக்காட்ட விரும்புவீர்கள். இலக்கு சார்ந்த அல்லது போட்டி நிறைந்த சூழ்நிலைகளில் மிகவும் தீவிரமாகவும், ஆர்வமாகவும் இருப்பீர்கள்.
குரு
குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு மற்றும் மீன ராசியை சேர்ந்தவராக இருந்தால், நீங்கள் கொடுக்கும் குணம் கொண்டவர், மிகவும் உற்சாகமான நபர். படிப்பில் கெட்டிக்காரராக இருப்பீர்கள். வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இடங்களை ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.
சனி
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம் மற்றும் கும்ப ராசியை சேர்ந்தவராக இருந்தால், நீங்கள் எதையும் ஒழுங்காக செய்ய நினைப்பீர்கள். மிகவும் பொறுப்பானவர்கள். விடாமுயற்சியுடன் ஒரு வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சவால்கள் உங்களை பயமுறுத்துவதற்கு பதிலாக, பயனுள்ள ஒன்றை உருவாக்க உங்களை ஊக்குவிக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











